பின் தொடர்பவர்கள்

0361 இறப்பிலிருந்து விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0361 இறப்பிலிருந்து விடுதலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 மார்ச், 2016

0361 பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை

பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை

கோஷு என்பவர் யூ-இ என்ற ஒரு ஜென் குருவிடம் வந்தார்.
"நான் பல ஆண்டுகளாக ஜென் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால், இன்னும் வெற்றி பெறவில்லை. எனக்கு வழிகாட்டி அருளுங்கள்" என்று கூறினார்.
யூ-இ கூறினார், ‘ஜென் பயிற்சியில் எந்த இரகசிய ஜால வேலையும் கிடையாது. பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை பெறுவதே அது!’ என்று.
‘பிறப்பு-இறப்பிலிருந்து ஒருவர் எப்படி விடுதலை பெறுவது?’ என்று கேட்டார் கோஷு.
‘உன்னுடைய ஒவ்வோர் எண்ணமுமே பிறப்பு, இறப்புதான்!’ என சற்றுக் குரலை உயர்த்திச் சொன்னார் யூ-இ.
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் கோஷு பரவசமடைந்தார். ஒரு பெரும் சுமையைக் கீழே இறக்கி வைத்த உணர்வு அவருக்கு ஏற்பட்டது!

மணவாட்டி பேசாலைதாஸ்

மணவாட்டி  பேசாலைதாஸ்  ஓர் ஊருக்கு அழகான பெண்ணொருத்தி, எங்கிருந்தோ சட்டென வந்து தோன்றினாள். அவள் எங்கிருந்து வந்தாள், அவள் யார் என்ற விபரங்கள...