பின் தொடர்பவர்கள்

0465 எப்பொருள் யார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0465 எப்பொருள் யார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

0465 எப்பொருள் யார் வாய் கேட்பினும்.......

எப்பொருள் யார் வாய் கேட்பினும்.......

 அன்பர்களே நமக்கு அறிவுரை சொல்பவர்கள் அல்லது அபிப்பிராயம் சொல்பவர்கள் பெரிய அறிவாளிகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்மீது அக்கறை கொண்ட சாதாரணமானவர்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட நமக்கு பெறும் வெற்றிகளை அள்ளித்தரக்கூடும், தாடி வைத்தவர்கள் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? ஆனால் சிலருக்கு தாடி அவர்களின் தோற்றத்திற்கு கம்பீரம் அளிக்கலாம் நமது பிரபுதேவா மாதிரி, தாடியால் மக்கள் மனதை கவர்ந்த ஒரு பெரும் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவருக்கு தாடி  மிக தோற்றமாக இருக்கும் என்று சொன்னதே அவரது சாதாரண பெண் ரசிகை, ஆபிரகாம் லிங்கனின் தோற்றத்தை மாற்றிய சம்பவமே இது!
ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலுக்காகத் தன்னை தயாரித்துக் கொண்டிருந்த சமயம் அது. அச்சமயத்தில் அவருக்கு ஒரு பெண் ஆலோசனை சொல்லி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், லிங்கன் அவர்களே, நீங்கள் ஒல்லியான தோற்றமுடையவர், உங்கள் கன்னத்தில் அம்மைத் தழும்புகள் இருக்கின்றன. எனவே நீங்கள் தாடி வைத்துக் கொண்டால் உங்கள் முகத் தழும்புகள் தெரியாது. உங்களின் தோற்றமும் மாறும். உங்களின் எடுப்பான தோற்றம் மற்றவர்களைக் கவரும் என்று அப்பெண் எழுதியிருந்தார். அதை வாசித்துப் பார்த்த அவரின் தேர்தல் பொறுப்பாளர்கள் அக்கடிதத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டனர். அதைப் பார்த்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள், அக்கடிதத்தை எடுத்து வாசித்துப் பார்த்து அதன்படி தாடி வளர்த்துக் கொண்டாராம். அதன்பின்னர் அவரது தோற்றமும் மாறியதாகச் சொல்கிறார்கள். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனக்கு ஆலோசனைக் கடிதம் எழுதிய அப்பெண்ணை நேரில் வரவழைத்து நன்றி சொன்னாராம்.
அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் யார் சொல்கிறார்கள் என்று பார்ப்பதைவிட, அந்த ஆலோசனையின் ஆழத்தை அலசுவது நல்லது.
அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...