பின் தொடர்பவர்கள்

0125 இதுதான் அறிவின் முதிர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0125 இதுதான் அறிவின் முதிர்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0125 இதுதான் அறிவின் முதிர்ச்சி....

இதுதான் அறிவின் முதிர்ச்சி..பேசாலைதாஸ்

அன்பர்களே கருத்துக்கள் அபிப் பிராயங்கள் எண்ணங்கள் எல் லாம் ஆளுக்காள் வேறுபடலாம், சிலவேளைகளில் ஒருவரின் கருத்துக்கள், எண்ணங்கள், நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியா ததாக அமையலாம், அந்த வேளைகளில் அவர்களின் எண் ணங்களை அவர்கள் மனம் காயப்படாமல், மறுக்கும் மாபெரும் பண்பு நம்மிடம் இருந்தால், நாம் விவேகங்களில் அரசனாக இருப்போம். நம் நாட்டு அரசியல் வாதிகளை பாருங்கள், ஒருவரின் கொள்கை பிடிக்காவிட்டால், அவனை சமூக விரோதியாக, இனத்துரோகியா, அவமதித்து பேசுகின்றோம். யாராக இருந்தாலும் அவனும் மனிதன் என்ற மகத்தான மானுட எண்ணத்தை நாம் அடியோடு மறந்துவிடுகின் றோம், அப்படி நாம் மறக்கக்கூடாது என்பதற்காக சுவாமிஜி விவேகானந்தரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம் என என் சிறுமதிக்கு தென்பட்டது!

                                                                 விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப்பட்ட வளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட் டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞான மும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகி றேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். 
 
                                                     அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள் வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன். இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்.. இதுதான் அறிவின் முதிர்ச்சி..... ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..அன்புடன் பேசாலைதாஸ் 

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...