பின் தொடர்பவர்கள்

0485 இதயத்தின் நிறைவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0485 இதயத்தின் நிறைவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஜனவரி, 2018

0485 இதயத்தின் நிறைவில் இருந்தே வாய் பேசுகின்றது!

இதயத்தின் நிறைவில் இருந்தே வாய் பேசுகின்றது!
  அன்புடன் பேசாலைதாஸ்
அன்பர்களே! எமது எண்ணங்கள் எதைப்பற்றி சிந்திக்கின்றதோ அதையே நமது இதயம் பற்றிக்கொள்கின்றது. இதயத்தின் நிறைவில் நின்றே வாய் பேசுகின்றது என்று இயேசு சொன்னார். வேதாகமத்தில் இன்னொரு வசனம் உண்டு அதாவது உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் இதயம் இருக்கும். சிலருக்கு பணத்தின் மீது அபரிமிதமான பற்றி, ஒருபோதும் திருப்தி அடையா பற்று ஆவல். பணத்தின் பற்றுதல் காரனமாக எதையும் செய்யத்துணிவர். எப்பொழுது பார்த்தாலும் தமது வங்கி கணக்கை பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைவர். ஒரு நாய் எதை சிந்திக்குமோ அதனை பூனை சிந்திக்காது. நாய்க்கும் பூனைக்கும் கருத்து ஒற்றுமை கிடையாது. ஒரு சில அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்வதற்காக, இழுத்தடிப்பதற்காக  ஒட்டு மொத்த கருத்து என்று கதை சொல்வார்கள். நாய்கள் பூணைகள் போல மனிதர்கள் இருக்கும் போது கருத்தொற்றுமை எங்கே தோன்றும்? இங்கே ஒரு சம்பவத்தை விபரிக்கின்றேன் ,,,, மரக்கிளை ஒன்றின் மேல் இருந்த பூனை ஒன்று க்ளுக்கென்று சிரித்தது. மரத்தடியில் படுத்திருந்த நாய், பூனையிடம், “முட்டாளே! என்ன விஷயம்?” என்று கேட்டது. பூனை சொன்னது. “இன்று எனக்கு அருமையான மதியத் தூக்கம். தூக்கத்தில் ஒரு கனவும் கண்டேன்.
கனவில் மழை பெய்தது. அடைமழை. என்ன அதிசயம் என்றால் அது எலி மழை. தண்ணீருக்குப் பதில், எலிகளை வானம் பொழிந்துகொண்டு இருந்தது”. நாக்கைச் சப்பிக்கொண்டு தனது கனவில் ஆழ்ந்தது பூனை.
நாய்க்கோ கடும் கோபம். “அடிமுட்டாள்! இதென்ன பைத்தியக்காரத்தனம். எங்களது புனித நூல்களும் மழையைப் பற்றி பேசுகின்றன. அவற்றைப் பொறுத்தவரை ஒரு அதிசய மழை பெய்யும். அந்த மழையில் எலிகள் பொழியாது. பூனைகள்தான் மழையாக விழும்”. ஒரு நாய் எதைச் சிந்திக்குமோ அதைப் பூனை சிந்திக்காது. அவற்றால் கருத்தொற்றுமையும் காணமுடியாது. ஒருவர் எலியைத் தனது கனவில் காணுகிறாரெனில் அவர் பூனையாகவே இருப்பார். அவரவர் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப சிந்திப்பார்கள். அவர்களின் சிந்தனைக்கேற்ப அவர்களின் வாழ்க்கையும் உயர்வு அடையும் எனவே அன்பர்களே உயர்வானதை எண்ணுவோம் அதன் படி உயர்வோம்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...