பின் தொடர்பவர்கள்

0507 கனவுச்சுகம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0507 கனவுச்சுகம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 பிப்ரவரி, 2018

0507 கனவுச்சுகம்!

கனவுச்சுகம்! பேசாலைதாஸ்

வயது அறுபதை தொடத்துடிக்கி ன்றது, கூடவே கனவுகளும் ஒட்டி க்கொள்கின்றது! இந்த வயதில் கனவுகளா? பின்னே என்னவாம், வரக்கூடிய‌ வயதில், கனவு வந்து தொலைக்காவிட்டால், இப்போது வருவதில் என்ன தவறு? கனவு வரட்டும் அதுவும் ஒருவகை சுகம்தானே! சில கனவுகளில், நான் அம்மனமாய் (பிறந்த மேனி) திரிவதாக வந்து போகும், ஏன் இந்த கனவு? கனவுக்குள், அடிம னப்பதிவுகள் இருக்குமென்பது, உளவியலா ளர்களின் கருத்து, உண்மை தான், என் வாலிப காலங்களில், வறுமை வாட்டி யபோது, படிக்கவே ண்டும் என்ற வேகம் இருந்தது, ஆனால் பக‌ட்டாய் உடுத்த ஆடை இல்லாவிட்டாலும், பரவாயில்லை, கந்தளாய் இல்லாத, ஒரு ஆடையும் என்னிடம் இல்லை. அண்ணன்மார் உடுத்தி, களைத்துப்போன, கந்தள் சரமும், காற்சட்டைகளும், எனக்கு சீதனமாய் கிடைப்பவை!  கன்னிய ர்கள் என்னைப்பார்க்கும் போது, காதல் பார்வை வீசாமல், கிழிஞ்ச ல்களை மறை ப்பதில் என் முழுக்கவனம் செல்லும். அது இப்போது கனவுகளாய் தொடர்கின்றது!
                                             

                                                                                         ஒரு கனவில் நான் மேலே பறந்து கொண்டிருப்பேன்.தரையிலிருந்து எளிதாக மேலே கிளம்பிப் பறக்க ஆரம்பி ப்பேன்.பறந்து கொண்டே பறவைப் பார்வையாய் கீழே இருக்கும் கட்டிட ங்களை,மனிதர்களையெல்லாம் பார்த்துப் பெருமிதம் அடை வேன், என் திறமை குறித்து.மனிதர்கள் என்னக் காட்டி எதோ பேசிக்கொ ள்வர்.பறப்பது மிக எளிதான செயலாக இருக்கும்.இரண்டு கைகளயும் பக்கவாட்டில் நீட்டி, துடுப்பு தள்ளுவது போல் முன்னிருந்து பின்னாகத் தள்ளி,காற்றைக் கிழி த்துக் கொண்டு முன்னேறுவேன்.மேலே செல்ல மேலிருந்து கீழாகவும்,கீழே இறங்கக் கீழிருந்து மேலாகவும் கைகளை அசைத்துப் பறப்பேன்.விழிப்பு வந்த பின்னும் அந்தப் பறக்கும் உணர்ச்சி நீடிக்கும்.பறந்து பார்க்கலாமா என்று யோசிக்க வைக்கும். இந்த கனவு இப்போது ஏன் எனக்கு இப்போது வரவேண்டும்? இளம் வயதில், படித்து மேதாவியாக வரவேண்டுமென்ற இலட்சிய வேட்கையின் நீட்சியா இது! அந்த வயதிற்கே உரிய,ஆசைகள் காரணமா?வாழ்க்கையில் மேலே மேலே செல்ல வேண்டும் என்ற ஆவல் காரணமா?மற்றவர் செய்யாத எதையாவது செய்ய வேண்டும் என்ற இச்சை காரணமா?வயதான பின்,வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரிந்த பின், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தரையில் காலூன்றி நின்ற பின் அக்கனவு ஏன் தொடர்கின்றது?எனக்குத் தெரியவில்லை.


                                                                                                          இன்னொரு கனவு-சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது வழியில் கிழே கிடக்கும் ரூபாய் நாணயத்தை குனிந்து எடுப்பேன்.அப்போது அருகில் இன்னொரு நாணயம் இருக்கும் அதை எடுக்கும் போது இன்னொன்று,இப்படி எடுக்க எடுக்க நாணயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.கனவு கலைந்து விடும்.இக்கனவும் அடிக்கடி வந்து போகின்றது .இதன் பொருள் என்ன?அந்த நாட்களில் எனக்குப் பணத்தாசை இருந்தது என்பதா?அப்படியா னால்,தங்கக் காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைப்பது போல அல்லவா கனவு வந்திரு க்க வேண்டும்?சில்லறைத் தனமான கனவு ஏன்?இப்படியிருக்குமோ?பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும்,அதைச் சிறிது சிறிதாகத்தான் சேர்க்க முடியும் என்ற அறிவும்தான் இக்கனவோ?இப்போது இக் கனவு வருவதற்கு காரணம்-பணத்துக்கு நான் கொடுக்கும் மிகக் குறைந்த முக்கியத்துவம்?இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்?உண்ண உணவு,உடுக்க உடை, இருக்க இடம், விடாமல் துரத்தும் ஒரு தேவதையின் அன்பு, இவை போதாதா?


                                                              ஆனால் வரவேண்டிய வயதில் வரவேண்டிய ஒரு கனவு எனக்கு வந்ததே இல்லை.என் வாலிபப் பருவத்தைப் பற்றி த்தான் சொல்கிறேன்.என் நண்பர்கள் எல்லாம் தங்கள் கனவில்'அவள் வந்தாள், இவள் வந்தாள்'என்றெல்லாம் சொல்வார்கள் .ஆனால் என் கனவில் ஒரு நாள் கூட ஒரு மாலாவோ, ரதியோ, நிலாவோ வந்ததில்லை. நானும் படுக்கப் போகும் முன், எனக்குத் தெரிந்த அழகான பெண்களைப் பற்றி நினைத்துக் கொண்டே படுப்பேன்.ஆனாலும் கனவு வந்ததில்லை. ஒரு நாள் ஒரு பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டு,இன்று அவ ளுடன் கனவில்பேச வேண்டும் என்று அழுத்தமாக நினைத்துக் கொண்டு படுத்தேன்.தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)


                                                                   இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்கு ஆன்மீகத்தில் இருந்த ஆர்வமா? வ்றுமையா? படிக்கவேண்டும் என்ற வேட்கையா? இவை தான் காரணமோ?ஆழ்மனத்தில் இருந்த இந்த உணர்வு கள் கனவுகளையும் தடுத்திருக்குமோ?எது எப்படியோ? இப்போது எனக்கு கனவு வருகின்றது. வருவதெல்லாம் சுகமான கனவு களே!இன்றைய இளைஞ ர்களைக் கனவு காணச் சொல்கிறார் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்-தங்கள் எதிர்காலம் பற்றி,அத்துடன் இணைந்த நாட்டின் எதிர் காலம் பற்றி, ஒரு வளமான,வலிமையான புதிய தாயகம் பற்றி. நான் இளைஞன் இல்லையே பின்னே ஏன் எனக்கு அந்த கனவு? இப்போது எனக்கு தேவையா னது சுகமான கனவு தாலாட்டும் , ஆனந்த மான துயில், அதில் மயில் போல, நிலா வந்து, கை நீட்டி வா! என்று என்னை அழைக்கவேண்டும், நானும் அவள் பரிவில், அவளின் அக்க றையில், அவள் அன்பில் என்னை மறக்கவேண்டும் அறுபதுக்கு வரும் ஆசைக்கனவுகள் பலிக்கட்டும், தொடரட்டும்!

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...