பின் தொடர்பவர்கள்

0029 நீ பாதி நான் பாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0029 நீ பாதி நான் பாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2019

0029 நீ பாதி நான் பாதி

 நீ பாதி, நான் பாதி கண்ணே!   பேசாலைதாஸ்

(இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களே.. என்ன பிரச்சனை என்றாலும் கணவன் மனைவிக்குள் விட்டு க்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது நண்பர்களே. இதை அழ்காக விளக்கு கின்றது இந்த கதை)                                                              

                                           
                           தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல் கிறான் ரமேஸ். வாகன வசதி இல்லாததால் நீண்ட நேரம் வாகனத்திற்காக காத்திருந் தான் ரமேஸ்.  கடும் வெயிலின் காரணமாக கர்ப்பமான அவன் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என் கணவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார்! என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள்.

                                                                     மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான். இதற்கு பெயர் தான் கண வன் மனைவி உறவு. தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபா ரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேக மாக சென்ற பிறகுதான் தெரிகிறது. அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இள நீர் தாருங்கள் என்கிறான ரமேஸ். இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கி றான். எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்து விட்டு தாருங்கள் என்றாள் அவள். 

                                                             இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான் ஆனால் அவளோ என் கணவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள். இளநீர் கண வன் கைக்கு வந்தது. அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள். அதோடு என் குழந்தையை சுமக்கிறாள். இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான். 

                                                                இவர்களின் காதலையும் விட்டுக்  கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணி டம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார். கனவ னின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள். நீ என் மனைவி. என் உயி ரின் பாதி என்ற அர்த்த த்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கணவன். இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்த தால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது. அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...