பின் தொடர்பவர்கள்

0519 நேர்மையும் புத்திசாலித்தனமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0519 நேர்மையும் புத்திசாலித்தனமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஏப்ரல், 2018

0519 நேர்மையும் புத்திசாலித்தனமும்

நேர்மையும் புத்திசாலித்தனமும் 

சிந்தனை சிறுகதை பேசாலைதாஸ்

அன்பர்களே! வேதம் இப்படியாக சொல்கின்றது, நீங்கள் புறாவைப் போல கபடமற்றவர்களாகவும், பாம்பை போல விவேகம் உள்ள வர்களாகவும் வாழுங்கள் என்று. நாம் விவேகமற்று புத்திசாலித்த னம் இல்லாமல், நல்லவர்களாக வாழ்ந்தால், நமது நல்ல உள்ள த்தை மனிதர்கள் வஞ்சித்துவிடு வார்கள். பாம்பானது பெண்ணா கிய ஏவாளை ஏன் ஏமாற்ற துணி ந்தது? பெண்ணாகிய ஏவாள் ஆசைகளுக்கு அடிமைப்பட்டு, புத்திசாலித்தனமாக யோசிக்கா மாட்டாள் என்பதற்காகவே ஏவாளை தன் விவேகத்தால் வஞ்சித்தது. இதனை மிக எளிதாக விளக்க முல்லாவின் வாழ்வில் நடந்த  சம்பவத்தை ஒரு கதை போல சொல்கின்றேன் 
                                                                           
                                                                  முல்லா நஸ்ருதீன் மரணப்படுக்கையில் கிடந்தார். தனது மகனை பார்த்து, "நான் இறப்பதற்கு முன்னர் இரண்டு விஷயங்களை உனக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவற்றை நீ கவனத்தில் கொள்ள வேண்டும். நேர்மையும், புத்திசாலித்தனமுமே அந்த இரண்டு விஷயங்கள் ஆகும். நமது கடைவாசலில் "நேர்மையே சிறந்த கொள்கை' என்ற போர்டு தொங்குகிறது. அந்தக் கொள்கையை எப்போ தும் கடைப்பிடி. யாரையும் ஏமாற்றாதே. கொடுத்த வாக்கை மீறாதே. வாக்கு கொடுத்துவிட்டால் அதை நிறைவேற்றவிடு' என்றார். அதைக் கேட்ட முல்லாவின் மகன், "இரண்டு விஷயங்களில் நேர்மை என்ற ஒன்று பற்றி தெரிந்து கொண்டேன். மிச்சமிருக்கும் இரண்டாவது விஷயமான புத்திசாலித்தனம் பற்றிச் சொல்லுங்கள் தந்தையே!' என்றான். "யாருக்கு வாக்குக் கொடுக்காதே! அதுதான் புத்திசாலித்தனம்' என்றார் முல்லா நஸ்ருதீன். 

                                                                       இவ்வுலகம் எப்போதுமே இரு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றது, நன்மை தீமை, நல்லது கெட்டது,  இதுபோல உங்கள் வாழ்வும் அபிப்பிராய பேதமுள்ள இரு கூறுகளாக பிரிந்த கிடக் கிறது. நேர்மை, புத்திசாலித்தனம் இரண்டையும் கடைபிடிக்க முயன்று பாருங்கள். அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...