பின் தொடர்பவர்கள்

0059 அசங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0059 அசங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0059 அசங்கா

Friday, 3 April 2015


நான்காம் நூற்றாண்டில்அசங்கா எ ன்ற புத்த துறவி வாழ்ந்து வந்தார். அவர் புத்தரின் போதனையை பின் பற்றி புத்தரின் ஞானத்தை அடைய முயற்சித்தார். அதற்காக கடுந்தவம் புரியமலையின் உச்சியிள் உள்ள ஆச்சிரமத்துக்குச்சென் றார். வருட ங்களாக கடுந்தவம் புரிந்தும், அவர் மனதின் மகிழ் ச்சி நிறைவேறவில்லை. தனது எண்ணம் நிறைவேறாது என்று உணர்ந்த அசங்கா துறவு நி லையை துறக்க நினைத்தார். அவர் துறவு இல்லத் தை விட்டு போய்க்கொண்டிருக்கையில், ஒரு மனி தன் பெரிய இரும்பு பாலத்தை ஒரு சிலைத்துண்டி னால் கட்டிக்கொண்டிருந்தான். அந்த மனிதனின் வினோத செயலைக்கண்ட அசங்கா, அவனிடம் சென்று என்ன செய்கின்றாய் என்று கேட்டார். என க்கு ஒரு ஊசி தேவை அதை நான் இந்த பெரிய இரு ம்பில் இருந்து, செய்யப்போகின்றேன் என்று சொன் னான். மனிதனால் நிட்சயம் முடியாது என்று தோன் றும் காரியத்தைப்பற்றி சிந்திக்கையில் நான் மட்டும் ஏன் முயற்ச்சியை கைவிடவேண்டும் என்று சொல் லி மீண்டும் தன் கடுந்தவத்தை அசங்கா தொடர்ந் தான். மீண்டும் வருடங்கள் தொடர்ந் தன.  அசங்கா  விற்கு எதிலும் மாற்றம் இல்லை தனது தவமுயற் ச்சியை கைவிட்டு மீண்டும் ஆச்சிரமத்தை விட்டு அகன்று சென்றான் 
                                                    இந்த தடவை அவன், ஒரு கிழவனை கண்டான், அந்தகிழவன் பெரிய மலை யை அதன் அடிவாரத்தில் ஒரு உளியால் துளைத் துக்கொண்டிருந்தான், அந்த கிழவனிடம் அசங்கா சென்று என்ன செய்கிறாய் என்று கேட்டார், அதற்கு அந்த கிழவன், இந்த மலை என் வீட்டுக்கு வரும் வெளிச்சத்தை தடுக்கின்றது எனவே இதனை அப் பால் நகர்த்துகின்றேன் என்று சொன்னான். அந்த கிழவனின் செயல் மீண்டும் அசங்காவை தவம் செய்ய தூண்டியது. மீண்டும் காலங்கள் வருடங்கள் உருண்டன, தவத்தால் பயனில்லை, அசங்கா வெறு ப்படைந்து ஆச்ரமத்தை விட்டு மீண்டும் வெளியே வரும்போது. ஒரு நாய் ஒன்று, தனது இரு கால்க ளையும் இழந்து, அதன் பிற்பகுதி புழுக்காளால் நிறைந்து இருந்தன. அந்த காட்சியை கண்ட அசங்கா நாயின் மீது கழிவிரக்கம் கொண்டு, தன் உடலின் ஒரு துண்டை வெட்டி நாய்க்கு உண்ணக்கொடுத்துவிட்டு, நாயின் உருக்குழைந்த பகுதியில் இருந்த புழுக்களை எடுக்க துணிந்தான். எங்கே அவ்வாறு தன் கைகளால் எடுக்கும் போது நாய் வருத்தப்படுமே என்று எண்ணி,

தன் நாக்கினால் எடுக்க கீழே குனிந்தான். நாயின் உடலை அசங்காவின் நாக்கு பட்டதும் நாய் மறைந்தது அ
ங்கு காட்சிப்பிழம்பாக புத்தர் தோன்றினார். அசங்கா புத்தரிடம் கேட்டான இதுவரயும் எனக்கு நீர் ஏன் தோன்வில்லை என்று. அது தவறு நான் எப்போதும் உன் முன்னே நிற்கின்றேன் ஆனால் உன் கர்ம சிந்தனை உன் கண்களை மறைத்துவிட்டன. ஊணமுற்ற நாயின் மீது எப்போது நீ கருணை காட்டினாயோ அப்போதே உண்மை அன்பை நீ உணர்ந்தாய், என்னை உன்னால் காணமுடிந்தது என்று புத்தர் கூறினார். நான் சொல்வதை நீ நம்பாமல் விட்டால்

என்னை உன் தோள் மீது அமர்த்திக்கொண்டு, எல்லோரிடமும் காட்டு, யாராவது என்னை பார்க்கமுடிகின்றதா என்று கேள் என புத்தர் சொல்ல, அசங்கனும் அவ்வாறே புத்தரை தோள் மீது சுமந்து கொண்டு, எல்லோரிடமும் கேட்டான், என் தோள் மீது யார் இருக்கின்றார் என்று, எல்லோரும் யாரும் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் ஒரே ஒரு கிழவி மடும்,  தோள் மீது நாயின் உடலை சுமக்கின்றாய் என்று சொன்னாள். அப்போது தான், கருணை இரக்கம் என்பதின் அர்த்தத்தை அசங்கன் உணர்ந்து கொண்டான்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...