பின் தொடர்பவர்கள்

0144 காயகல்பம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0144 காயகல்பம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0144 காயகல்பம

காயகல்பம

காயகல்பம் உயிரையே காக்கும் உன்னதமான சித்த வைத்திய மூலிகை.இதை அகத்தியர் ஒருமுறை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.அக்கதையை காண்போம்.எதுவுமே அளவு தான், உணவுவாகட் டும்,உறக்கமாகட்டும். இதை அறியாத ஓர் மன்னன் காட்டில் வேட்டையினால் வந்த அசதியின் காரண மாக நெடுநேரம் தன்னிலை மறந்து உறங்கலா னான். அச்சமயம் அவ்வழியே வந்த தேரை ஒன்று மன்னனின் மூக்கு வழியே மூளைக்கு சென்று விட்டது. இதையறியாத மன்னன் அப்பொழுதும் தூங்கி வழிந்தான்.சூரியன் மறைந்து கொண்டிருக்க மன்னர் தூங்குவதை கண்ட அமைச்சர் மன்னரை எழுப்பி,ஒரு வழியாக அரண்மனை அழைத்து சென் றார். மறுநாள் மன்னர் அலறும் சத்தம் அவரது நாட் டை மட்டுமின்றி அயலான் நாட்டிற்கும் செல்லும் அளவிற்கு இருந்தது.மன்னர் தலை வழியில் துடித் துக் கொண்டிருந்தார்.அவரது நாட்டு வைத்தியர் மட்டுமின்றி அயல் நாட்டு வைத்தியர்கள் வரை அனைவரும் வந்து மன்னனை சோதித்து பார்த்து, என்ன வியாதி என்பதே தெரியவில்லை என கை யை விரித்தனர்.மன்னர் வேதணையில் துடித்து கொண்டிருந்தார்.அப்பொழுது தான் அமைச்சருக்கு அகத்தியரின் ஞாபகம் வரவே,நேராக அவரின் ஆச ரமம் சென்று மன்னரின் நிலையை விவரித்தார். அகத்தியர் தன் ஞான திருஷ்டியால் மன்னனின் தலையினுள் தேரை இருப்பதை அறிந்தார். பிறகு, அவர் நேராக அரண்மனை சென்று அறுவை சிகிச் சையினை ஆரம்பித்தார். ஆம் மன்னரின் மண்டை ஓட்டை வெட்டி எடுத்தார். உள்ளே ஒரு ஓரத்தில் தேரை இருந்தது.கையால் பிடிக்க நினைத்தால், மன்னனின் மூளையை சேதப்படுத்திவிடும் என பயந்தார் அகத்தியர்.பிறகு அவரின் மாணவர் ஒரு வரின் எண்ணப்படி தேரையின் கண்ணில் படும்படி ஒரு பத்திரம் முழுவதும் நீரை வைக்க, இதை கண்ட தேரை ஓரே தாவலில் நீரில் குதித்தது.பிறகு காய கல்ப மூலிகையில் உதவியுடன் வெட்டிய அரசரின் மண்டை ஓட்டை ஒட்ட வைத்து, அதே மூலிகை யால் அவரை உயிர் பிழைக்கச்செய்தார்.காயகல்பம் போன்ற பல லட்சக் கணக்கான உயிர் பிழைக்க செய் யும் மூலிகைகள் இந்தியாவில் உள்ளது.அந்த மூலி கைகளை கண்டறிவோம்.மனித குலத்தை காப்போம்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...