பின் தொடர்பவர்கள்

0454 அம்மா என்றால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0454 அம்மா என்றால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 மே, 2017

0454 அம்மா என்றால் அறிவும் அன்பும்!

      அம்மா என்றால் அறிவும் அன்பும்! 

                                      மோகனதாஸுக்கு அன்றைய நாள் அதிஸ்ட மாக அமைந்தது. அமெரி க்கா வின் கிரீன் காட்டு க்கு விண்ணப்பம் செய்த மோகனுக்கு அமெரிக்கா வில் குடியேறும் சந்த ர்ப்பம் கிடைக்கும் என்பதில் துளியேனும் நம்பிக்கை இல்லை. உயர்தர பரிட்சையில் அதிகளவு மதிப்பெ ண்கள் பெற்றிருந்த போதும் அவனுக்கு பல்கலைக்க ழக கல்வி கைகூடாமல் போன, துர் அதிர்ஸ்டசாலிக்கு, அமெரிகாவில் வாழும் சந்தர்ப்பம் கிடைக்கவா போகி ன்றது என்று நினைத்த மோகன், தனது நண்பர்களின் நச்ச ரிப்பினால்அமெரிக்காவின் கிரீன் காட்டுக்கு மனு ப்பண்ணி இரு ந்தான், ஆனால் இப்போது அவனுக்கு அமெரிக்கா செல்லும் அதி ஸ்டம் அழைத்தது. உட்சா கம் கரை புரண்டோடினாலும் மோகனுக்கு தனது வய தான அம்மாவை தனியே விட்டு செல்வது மனது க்கு வரு த்தமாகவே இருந்தது. ஆனாலும் தனது முதுமை யினாலும், தன்னை பராமரிக்கும் நிலையினாலும் தனது ஒரே மகனின் அதிஸ்டமான எதிர்காலம் மண்ணாகி விடக்கூடாதே என்ற ஒரே எதிர்பார்ப்பில் தனது மகனை அமெரிக்கா செல்லும் படி வற்புறுத்தி னான். செய்வ தறியா மோகனும் தன் தாயை வாயோதி இல்லத்தில் அவளை சேர்த்துவிட்டு அமெரிக்கா பய ணமானமன் மோகன்.
                                                  தன் மகனின் பிரிவை எப்படியோ தனக்குள் ஜீரணமாக்கிக்கொண்டாள் மோகனின் தாய். நாட்கள் செல்ல செல்ல மகனின் பிரிவு, அவளை வாட்டி யதோடு அவளின் உடலில் பலத்தையும் வேகமாக இழ க்க வைத்தது. தான் இனிமேல் அதிக காலம் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பதை அறிந்த மோக னின் தாய், தன் மக‌னுக்கு ஓர் கடிதம் எழுதினாள். அந்த கடித த்தை எழுதி, விடுதி மேற்பார்வையாளரிடம் கொடுத்து மகனுக்கு அனுப்பி வைக்கும்படி கொடுத்தாள். அந்த கடிதம் அமெரிக்காவுக்கு அனுப்ப ட்டு கொஞ்ச கால த்திலேயே மாகனின் தாய் இறந்துவிட்டாள்.
                                           தாயின் இழப்பு செய்தி மோகனுக்கு அனுப்பட்டது. மோகனும் தன் தாயின் இறுதிக்கிரிகை களுக்காக தாய் நாடு வந்து அம்மாவுக்க கடைசியாக செய்யவேண்டிய அத்தனை காரியங்க ளையும் ச்ய்து முடித்தான்.  மூன்று வாரங்கள் கழித்து, மீண்டும் அமெ ரிகா செல்ல இருந்த நேரம், மோகனின் அம்மாவால் அனுப்பப்ப ட்ட கடிதம், முகவரி பிழைத்ததினால் மீண்டும் அது முதியோர் இல்ல த்துக்கு திருப்பி அனு ப்பப்பட்டது. அந்த கடிதத்தை அவர்கள் மோக னுக்ககு கொடுத்தார்கள். மோகன் அதை பிரித்துப்படித்தான். என் அருமை மகனே! உன்னை பிரிந்து என்னால் அதிக காலம் உலகில் வாழ விருப்பம் இல்லை. எனது ஆயுள் சீக்கிரம் முடிந்து போகும், அதற்கு முன் சில அறிவுரை களை என் இதயத்தின் ஆழத்தில் இரு ந்து எழுதுகி ன்றேன். இதனை உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் சொல்லிக்கொடு, வயோதிப பெற்றோர்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காய் உனக்கு இதனை எழுதுகின்றேன்.
                                                            எனதருமை மகனே!, நான் உன்னை மிகவும் அன்புகூர்கின்றேன். முதுமையின் வாசலில் நான் முதலடி வைக்கை யில், தள்ளாட்டம், என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்... கொஞ்சம் பொறுமை கொள்! அதிகம் புரிந்துகொள்! நான் சாப்பிடுகையில் கை நடுங்கி சாதம் சிந்தி விட்டேனா? சத்தம் போடாதே... உனக்கு நான் நிலாச்சோறு ஊட்டிய நாள்களை நினைத்துப்பார்! என் முதுமை பார்த்து முகம் சுளிக்காதே! ஆடை மாற்றுகையில் அவதிப்படுகிறே னா? அசுத்தம் செய்து விட்டேனா? ஆத்திரப்படாதே.....படுக்கை முழுதும் நீ செய்த ஈரங்களின் ஈர நினைவுகளை இதயத்தில் நிறுத்து!
                                ஒரே பேச்சை, கீறல் விழுந்த ஒலிநாடா போல் ஓயாமல் சொல்கிறேனா? சலித்துக் கொள்ளாதே.... ஒரே மாயாவிக் கதையை, ஒரு நூறு முறை என்னைப் படிக்கச் சொல்லி நீ உறங்கிய இரவுகளை நினைவில்கொள்! நான் குளிக்க மறுக்கிறேனா? சோம்பேறித்தனம் என்று சுடுசொல் வீசாதே.... உன்னை குளிக்க வைக்க நான் செய்த யுக்திகளை எனக்காகப் புதுப்பித்துக் கொள்! புதிய தொழில்நுட்பம், புதிய பயன்பாடுகள், உன் புயல்வேகப் புரிந்துகொள்ளல், சத்திய மாய் எனக்குச் சாத்தியமில்லை! கேவலப்படுத்தாதே..கற்றுத்தா! கவனித்துப் பழக அவகாசம் தா!
                                            இனி, சில காலத்தில், மூப்பினால், என் நினைவுகள் அறுந்து போகலாம், உரையாடல் உடைந்து போகலாம்! நிறைய வேலை இருக்கிறதென்று நேரம் பார்க்காதே..... என் அருகிருந்து ஆசுவாசப்படுத்து! என் கால்கள் என்னை ஏமாற்றுகையில், நீ முதல் நடை பழக, என் விரல் நீண்டது போல், கைகொடுத்து எனக்கு உதவி செய்! ஒரு நாள் சொல்வேன் நான், வாழ்ந்தது போதுமென்று! வருத்த ப்படாதே.....சில வயதுவரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை... சில வயதுக்குமேல் வாழ்வதில் அர்த்தமில்லை... காலம் வரும்போது, நீயும் இதைப் புரிந்து கொள்வாய்! இனி நான் வேண்டுவதெல்லாம் நீ எனைப் புரிந்துகொண்ட புன்னகையே!
                                                     மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனதருமை மகனே! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்..... என் வாழ்வு அமைதி யோடும், உன் அரவணைப்போடும் முற்றுப்பெற முயற்சியேனும் செய்வாயா? கடிதத்தை வாசித்து முடிக்கையில் மோகனின் கண்களில் கழிந்த கண்ணீர், அவன் கண்ணத்தில் வழிந்தோடியது.  யாவு
ம் கற்பனையே   பேசாலைதாஸ்  நோர்வே

(பிற் குறிப்பு : இணையத்தளத்தில் பதிவான ஒரு கடிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதை என்னால்விரிவாக்கப்பட்டது)

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...