பின் தொடர்பவர்கள்

0357 இதயங்கள் வழியாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0357 இதயங்கள் வழியாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2016

0357 இதயங்கள் வழியாக பேசிப் பழகுவோம்

இதயங்கள் வழியாக பேசிப் பழகுவோம்
கதவைத் திறக்க சாவியைத் தேடியபோதுதான் பேசாலைதாஸிற்கு தெரிந்தது, சாவி எங்கோ தொலைந்து விட்டது என்று. பக்கத்து வீட்டில் சுத்தியல் வாங்கி, கதவில் தொங்கிய பூட்டின் தலையில் அடித்து, சிரமப்பட்டுத் திறந்தான் பேசாலைதாஸ்.
வீட்டிற்குள் சென்றதும், முதல் வேலையாக, மாற்றுச் சாவியை எடுத்து பூட்டின் அருகில் வைத்துக் கொண்டான். அப்போது அங்கிருந்த‌ சுத்தியல், அந்தச் சாவியை நோக்கி, 'உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். நீ மட்டும் சீக்கிரம் திறந்துவிடுகிறாயே அதெப்படி?' என்று கேட்டது.
அதற்கு சாவி சொன்னது, 'நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பூட்டைத் திறக்க, நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால், நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்று.
ஆம் இதயம் திறந்து அன்பு செய்பவர்களுக்குத்தான் தெரியும் எங்கே அடித்தால் அன்பு செய்யும் உள்ளத்திற்கு வலிக்கும் என்ற உண்மை!. அன்பால் இதயத்தை தொடுவதுதான் உண்மை அன்பு! இதயம் திறந்து சொல்கின்றேன் அதுதான் உண்மை போதுமா அன்பர்களே! அன்புடன் பேசாலைதாஸ

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...