பின் தொடர்பவர்கள்

0004 நம் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0004 நம் எண்ணங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0004 "நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே"

"நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே" பேசாலைதாஸ்

அவரவர் எந்த நிலை யில் இருக்கின்றார்களோ அதையே அடிப் படையாக கொண்டு, மற்றவர்களின் செயல்களை எடைபோடுவார் கள், அல்லது தமது எண்ணங்களை தம்மை வைத்தே மதிப்பீடு செய்வார் கள். 

            ஒரு மத்தியானவேளை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடி யில் ஒருவர் நன் றாக உறங்கிக்கொண்டிருந் தார். அவ்வழியாக வந்த விறகுவெட்டி அவரை ப்பார்த்தார். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயி லிலும் இப்படி உறங்குகிறான்” என நினைத்துக் கொண்டே சென்றார். 

                                              திருட்டுத் தொழில் செய்யும் ஒருவர் அடுத்ததாக, அவ்வழியாக வந்தார். இரவு முழுவதும் கண்விழித்து திருடியிருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகி றான்” என நினைத்துக்கொண்டே சென்றார்.

                                                   மூன்றாவதாக குடிகாரர் ஒருவர் அவ்வழியாக வந்தார். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென் றார். 

                                                      சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உற ங்கும் இவர், முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறு யாரால் இத்தகையச் செயலைச் செய்ய முடியும்” என அவரை வண ங்கி விட்டு சென்றார். "நாம் எப்படியோ, நம் எண்ணங்களும் அப்படியே" அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...