பின் தொடர்பவர்கள்

0424 உலக்கையால் பல் குத்தலாம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0424 உலக்கையால் பல் குத்தலாம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 பிப்ரவரி, 2017

0424 உலக்கையால் பல் குத்தலாம்!

உலக்கையால் பல் குத்தலாம்!
அன்பர்களே! நான் ஏற்கனவே குருட்டு சம்பிரதாயங்கள் என்ற தலைப்பில் ஆச்சி ரமத்தில் கட்டப்பட்ட ஒரு கறுத்த பூனை பற்றி எழுதி இருந்தேன். மீண்டும் குருட்டு சம்பிரதாயங்கள், மூடப்பழக்கவழக்கம் பற்றி வேறு ஒரு கோணத்தில் எழுதலம் என்று ஆசைப்படுகின்றேன். நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு நோக்கத்துடன் செய்த பல விஷயங்கள் அவற்றின் உண்மைத் தன்மையை இழந்து வெறும் சடங்குகளாகத் தொடர்கின்றன. கர்நாட காவில் சில கிராமங்களில் ஒரு வழக்கம். வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு அசைவம் பரிமாறினால், சாப்பாட்டு இலைக்குப் பக்கத்தில் ஓர் உலக்கை வைப்பார்கள். எதற்கு என்று விசாரித்த தில் அர்த்தம் பிடிபட்டது. அசைவ உணவு பற்களுக்கு இடையில் சிக்கினால், எடுப்பதற்கு வசதியாக ஒரு குச்சியை இலைக்கு அருகில் வைப்பது முதலில் வழக்கமாக இருந்ததாம். காலப்போ க்கில், குச்சி என்பது கொம்பு என்று புரிந்துகொள்ளப்பட்டு, முத லில் ஏதோ ஒரு முட்டாள் ஓர் உலக்கையை வைத்தான். அதுவே பிற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயம் ஆகிவிட்டது. உலக்கையால் பல் குத்த முடியுமா? இது பற்றி ஒரு வேடிக்கை கதையும் உண்டு. ஒருவன் சாப்பாட்டு இலையில் சில இடங்க ளில் உலக்கை வைத்திருக்க்ன்றார்களே அது எதற்காக என்று தன் நண்பனிடம் கேட்க, விளக்கம் புரியாத அந்த நண்பன், ஓ அதுவா! சாப்பாடு, சாப்பிடும் போது சாப்பாடு உச்சிக்குப்போய் சிக்கிகொள்ளுமா? என்பதை பரிசோதிக்க சாப்பாடு தருவத ற்முன் உலக்கையால் மண்டையில் அடிப்பார்கள் அதற்கு பின்னர் தான் சாப்பிட அனுமதிப்பார்கள் என்று வேடிக்கையாக சொல்லியிருக்கின்றான்.  பின் ஒரு நளில் அவன் ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக போயிருக்கின்றான். அங்கே சாப்பாடு இலை யில் உலக்கை இருந்தை கண்டு, திகைத்தபடி, இந்த உலக்கை எதற்காக என்று கேட்க, வீட்டுக்காரருக்கு விளக்கம் தெரியாமல் முளிக்க, விருந்தாளி வீட்டை விட்டு ஓட, வீட்டுக்காரர்களோ அட விருந்தளிக்கு உலக்கையில் விருப்பம் போல என்று நினைத்து உலக்கையை எடுத்து கொண்டு விருந்தாளியை நோக்கி ஓட, விருந்தாளியோ உலக்கையால் அடிக்க விரட்டுகின்றார்கள் என்று எண்ணி இன்னும் வேகமாக ஓடினான். பார்த்தீர்களா! மூடப்பழக்கம் தரும் விபரீத விளைவுகளை. இதை மேலும் விளக்க இன்னொரு சம்பவம் சொல்கின்றேன்.

                                                                 பார்வையற்றவன் இருட்டில் வெளியே புறப்பட்டான். நண்பன் அவனிடம் ஒரு விளக்கைக் கொடு த்தான். “கண் தெரியாத எனக்கு இந்த விளக்கால் என்ன லாபம்?” “நண்பா… இது உன் கையில் இருந்தால், எதிரில் வருபவர்கள் உன் மீது மோதாமல் தவிர்ப்பார்கள். விளக்கைக் கையில் பிடி த்துக் கொண்டு அவன் இருட்டில் நடந்தான். இருந்தபோதிலும் யாரோ ஒருவன் மீது மோதிக்கொண்டான். “என் கையில் தான் விளக்கு இருக்கிறதே… கவனித்து வந்தால் என்ன?’’ என்று சற்றே கோபமாகக் கேட்டான். மோதியவன் சொன்னான், “விளக்கு இருக்கிறது. ஆனால், சுடர் எப்போதோ அணைந்துவிட்டு இருக்கி றது நண்பா!” அன்பர்களே! விளக்கை அவன் கையில் வைத்திரு ந்தது அதன் வெளிச்சத்துக்காக. அது அணைந்துபோனப் பின்னும், அதை உயர்த்திப்பிடித்து நடந்து வருவது அர்த்தமற்ற ஒரு சடங்காகிவிட்டது. ஏதோ ஒன்றின் நோக்கம் தேய்ந்து போய், அது வெறும் சடங்காக எப்போது மாறிப் போகிறதோ, அதன்பின் அந்தச் செயலால் எந்த நன்மையும் வர வாய்ப்பு இல்லை. இது போலத்தான் நமது ஊரிலும் சில பழக்கவழக்கங்கள் அர்த்தம் புரியாமல் அனுஸ்டிக்கப்படுகின்றன. அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...