பின் தொடர்பவர்கள்

0026 ஞானவேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0026 ஞானவேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

0026 ஞானவேட்டை

ஞானவேட்டை   சிறுகதை  பேசாலைதாஸ்

                         
வெண்ணிலவின் மெல்லிய ஒளி, கோட்டை மதிலின் நிழலை, பசுந்தரையில் படரவிட்டது! கெளதமன் மனம் பரபரத்துக்கொண்டி ருந்தது. எப்படியாவது இந்த அர ண்மனையையிட்டு, தொலைதூரம் சென்று, காணாமல் போய்விடவேண்டும். கெளதமன் தன் தீர்மானத்தில் உறுதியாகவே இருந்தான், அர ண்மனை சுகபோகத் தில், அடுத்த இராச்சியத்தின் சர்க்கரவர்த்தியாக முடி சூடி, சகல அதிகாரங்களோடு இராஜிய பரிபாலனத்தை தன் தோளில், சுமக்கும் அந்த இனிய கனவுகளோடு, அரண்மனை பரிவாரங்களோடு, மந்திரி, பிரதானிகள் என்று அளவளாவித்திரிந்தவன், அந்தரபுர அழகிகள், ஆடல் பேரழகிகள்,  சங்கீத இசைக்குயில்கள் இவர்களுடன், தன் இளமை முறுக்குடன் ஆனந்த மாய் பொழுதை கழித்தவன், யசோதா உலகே வியக்கும் பேரகுழகு மனை வியின், பேரன்பில் திளைத்த கெளதமன், எல்லாவற்றையும் துறந்து, அர ண்மனை சுக போகங்களை துறந்து, கண்கான தேசம் செல்ல, கெளதமன் மனம் துடி த்துக்கொண்டு இருந்தது. அவனது இதயமோ என்றுமில்லாத வாறு பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. அந்த பேரிரைச்ச லுக்கு அர்த்தமே இல்லை.

                                            துன்பம் அதை அவன் ஒருபோதும் துய்த்ததில்லை, இதுவரை அவன் இன்பம் ஒன்றே அனுபவித்துவந்தான், ஆயினும் அவன் மனதில், எதோ இனம் புரியா தேடல்!,,,அந்த மரண ஊர்வலத்தில், அந்த பெண்ணும் , இறந்தவனின் உறவுகள் எழுப்பிய அவல ஓசைகள்,, இன்னு ம், இன்னும் அவன் காதில், எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. வாலிபத் தின் வயதுக்கு வந்தவன், யசோதாவை கரம்பிடித்தவன், ராகுல் ஆண்குழ ந்தை பிறந்து, ஒரு நாள் கூட ஆகவில்லையே, அப்படி இருந்தும், கெளதமன் இதுவரை மரண செய்தியை கேட்கவில்லையா? அல்லது அதுபற்றிய விட யத்தைக்கூட இதுகாறும் அவன் அறியாமலா அவன்  இருந்தான்? இது திட்டமிட்டு நடந்த சதியா? பட்டத்து இளங்குமரனுக்கு வாழ்வின் இயற்கை யாக நடக்கும், தவிர்க்க முடியா மரணம், முதுமை, பிணி என்பன திட்ட மிட்டு கெளதமனுக்கு மறைக்கப்பட்டதா?

                                         என்றோ ஓர் நாள் மனிதன் மரணத்தையும், அதற்கு ஏதுவான பிணியையும், முதுமையையும் சந்திக்கவேண்டும் என்ற யதா ர்த்த‌ உண்மைகள், கெளதமனுக்கு மறைக்கப்பட்டது, அவனுக்கு எதிரான, அநியாயம். எது மறைக்கப்படுகின்றதோ, எது தெரியக்கூடாது என்று, நாம் பாலாத்தாரம் செய்கின்றோமோ? அது என்றோ ஓர் நாள், வீரியத்துடன் வெளிப்படும், அதனை யாரும் தடுக்க முடியாது! உண்மை பிடிவாதம் கொண்டது, அது என்றோ ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும், என்ற சாதாரணவிடயத்தை, மந்திரிகள் ஏன் கெளதமனுக்கு மறைத்தார்கள்? பிறந்தவர்கள் இறப்பார்கள் என்ற பேருண்மையை கெளதமன் உணர்ந்து கொண்டான். இனி அரன்மணையின் சுக போகங்களில், திளைப்பதில் அர்த்தமில்லை, முதுமை, பிணி, மரணம் இதற்கான காரணத்தை அவன் கண்டேயாகவேண்டும். மரணம், பிணி, முதுமை இவைகளிடம் இருந்து, தானும் தன் மக்களும் காப்பாற்ற ப்பட வேண்டும், அதுவே மாவீரமும் வல் லமையும் கொண்ட ஒரு சைத்திரியனின் கடமை என்பதை அவன் மனம் அவனுக்கு உறுதியாக் சொல்கின்றது! ஆன்மீக தேடலுக்கு கெளதமன் மனம் விரைவு கொள்கின்றது!

                                            ஆத்மா வேகமானது, உடலோ துர்ப்பலம் கொண்டது, இயேசு சொன்னதைப்போல, இப்போது கெளதமன் மனதில் போராட்டா ம்! நேற்றுத்தான் பிறந்த ஆண்மகன், இவன் தான், இவன் தான், இவ னைப்பா ர்த்தால், நான், என் ஞானத்தேடலை கைவிட்டுவிடுவேன். சந்திரனைப் போல, முழுமதி  போல, நான் ஞான முக்தி பெறவேண்டும், அதற்கு தடை இவனே! சந்திரனை விழுங்க துடிக்கும்  ராகு போல, இவன் என் ஞானத் தேடலுக்கு தடையாக இருப்பான். நேற்றுப்பிறந்த பச்சிளம் பாலகனை நான் பார்த்தேனேயானல், என் மன உறுதி, துவண்டுவிடும், ஆனாலும் மனித மனம், மனித இயல்பு…… தனதுகுழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க விரும்பினான் கெளதமன் , இன்னும்  அவன் குழந்தையை பார்க்க வேயில்லை. ஆனால் போர்வையை விலக்கும்போது யசோதரா விழித்து விட்டால், அவள் எழுந்து கொள்வதற்கான வாய்ப்பு கள் உள்ளன. அவள் எழுந்துவிட்டால், “இந்தஇரவில் என் அறையில் நீங்கள் என்ன செய்கிறீ ர்கள், நீங்கள் எங்கோ செல்ல தயாராகி இரு ப்பதுபோல தோன்றுகிறதே?” எனக்கேட்பாள்.

                                                                                             கெளதமன் அரண்மனையை விட்டு புறப்பட,  தேர் வாசலில் தயாராக இருக்கிறது,எல்லாமும் தயர் நிலையில், கிளம்ப வேண்டியதுதான்பாக்கி. கெளதமன், தனது தேரோ ட்டியி டம், “ஒரு நிமிடம் பொறு, நான் எனது குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். ஏனெனில் நான் திரும்ப வராம லும் போகலாம்”. என்று கூறியிருந்தான். ஆனால் இப்போது நீன்ட நேர மனப்போராட்டத்துக்குப்பின்னர், ஒரு தீர்மானத்துக்கு கெளதமன் வருகி ன்றான். அவன் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை என்பதே, அந்த தீர்மானம். ஏனெனில் யசோதரா எழுந்துஅழுது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, எதற்கு இந்த துறவறம்?,நீங்கள் எங்கே செல்கி றீர்கள்?, ஞானமடைதல் என்பது என்ன?என்று கதற தொடங்கிவிட்டால்…. என்ன செய்வது?. ஒரு பெண்ணைப் பற்றி யாருக்கும்ஒன்றும் தெரியாது – அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும்.

                                                                                                   அரண்மனை விழித்துக்கொ ண்டால், அவ்வளவுதான், கதையே கந்தளாகிவிடும். தந்தை விழித்துக் கொள்வார். அவர் மிகவும் வாயதான காலத்தில் பிறந்தவன் நான். அவரு க்கு ஒரே ஒரு மகன் நான். தந்தையின் நம்பிக்கைகள் எல்லாம் இளவரசன் என்னைச்சார்ந்தே இருக்கின்றது. அவர் மிகவும் சக்தியிழந்து போய் விட் டார், ஓய்வெடுக்கவிரும்பி என் பட்டாபிசேகத்துக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றார். தந்தையின் ஆசைகளை நிறை வேற்றுவது ஒரே ஒரு மகனின் கடமையல்லவா, கெளதமன் குற்ற உண ர்வில், நெட்டுருகி, நீன்ட பெரும் மூச்சு விடுகின்றான்.  இல்லை, இல்லை பிறந்த மகனை பார் ப்பதில்லை, அழகுவதன என் மனைவி யசோதா வையும் நான் பார்ப்பதி ல்லை. நான் போவதொன்றெ எனக்குள்ள ஒரே ஒரு தீர்வு! என்னை எல்லோ ரும் மன்னித்தருள்க, அந்த இருட்டில், வெண்ணிலா வா கெளத்தமா, சீக்கி ரம் வா! ஞான வேட்டையில் இறங்கி, பரி நிர்வாண என் முழுமதி ஞானத் தைப்பார் என்று வெண்மதி அழை ப்பதாகவும், விரைந்தோடும் மேகங்கள், அவனை விரவு படுத்த, கெளதமன் அரண்மனை விட்டு வேகமாக விரைந் தோடுகின்றான். அமை தியை கிழித்துக்கொண்டு, குதிரையின் கணை ப்பில் விரைந்து செல்கி ன்றான் கெளதமன்,,,,,,,,,,, தொடரும்,,,, பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...