பின் தொடர்பவர்கள்

0437 அடக்கமுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0437 அடக்கமுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மார்ச், 2017

0437 அடக்கமுடையார் அறிவில்லாதவரா?

அடக்கமுடையார் அறிவில்லாதவரா?

அன்பர்களே அறிவு என்பது நல்ல வயது போன அல்லது அதிக மாக படித்த வாயோதிப ர்களுக்கு மட்டும் இருக்கும் சொத்து என்று மதிப்பிடுவது தவறு. உமையாளிடம் பால் குடித்து,  அறிவு பெற்ற திரு ஞான சம்பந்தர் ஆறுவயதில் அறிவு தோய்ந்தவராக, ஞானம் பெற்றவராக இருந்தார். இவ்வ ளவுக்கும் ஏன்? சுட்ட பழம் வேண்டுமா? சுடாதா பழம் வேண்டுமா? என்று சங்க கால புலவர் ஒளவ்வையாரையே குழுப்பிய முருகப்பெருமான், ஒரு இடைச்   சிறுவனாக இருந்திருக்கின்றார்,  "அரியது கேட்பின், வரி நெடுடு வேலோய் அரிதிலும் அரிது மானிடராய்ப் பிறப்பது" என்று ஒளவ்வைப்பாட்டி,  குழந்தை ஆறுமுகனுக்குத்தானே! பாடியு ள்ளார். எனவே எப்பொருள் யார் வாய் கேட்பினும்,      
மெய்ப்பொருள் காண்பது அறிவு. என்ற சான்றோ ரின் சொல்லு க்கு ஏற்ப, உண்மையை, ஞானத்தை யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதில் மேலோர் கீழோர், உயர்ந்தவன் தாழ்ந்த வன், சிறியவன் பெரியவன் என்ற பாகுபாடு காட்டுவது பெரும் தவறு, இதை இன்னுமொரு சின்ன சம்பவத்தோடு சொல்கி ன்றேன் கேளுங்கள்!
                                                     குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றி க்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறு க்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டா ன்.  ‘‘வருமே…’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ ‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விட லாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான். சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனு க்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான். ‘‘போய்த்தான் பாருங்க ளேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேக மாக விரட்டி சென்றான். சிறிது  தூரம் போனதுமே சாலை முழுவ தும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரனுக்கு அப்போது தான் சிறுவன் சொன்ன வார்த்தை களின் அர்த்தம் புரிந்தது. இப்பொழுது உங்களுக்கு  ஏதாவது புரிகின்றதா அன்பர்களே! அடக்கமுடையார் அறிவிலார் என்று எண்ணி, யாரையும் தூக்கி எறியாதீர்கள்! பஸ் வண்டியிலே டிக்கட் கிழித்த ரஜனிகாந், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார், பால் விற்ற ஓ.பி. பண்ணீர்செல்வம், தமிக முதல்வர், வெறும் வீடியோ ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிசிகலா தமிழக அரசியலையே புரட்டிப்போட்டவள். எனவே யாரையும் வெறும் காகிதம் என்று எண்ணிவிடாமல் கற்பிப்ப வன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது என்று எண்ணுங்கள். என்றும் அன்பில் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...