பின் தொடர்பவர்கள்

0017 சுண்டெலியும் பூனைக்குட்டியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0017 சுண்டெலியும் பூனைக்குட்டியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜனவரி, 2021

0017 சுண்டெலியும் பூனைக்குட்டியும்

 

சுண்டெலியும் பூனைக்குட்டியும்...   பேசாலைதாஸ்


நசுக்கப்பட்ட ஒரு சிறுபாண்மை இனமானது, தன் அபிலாசை களை அடைந்து கொள்வதில், பேரினவாத சிந்தனை எப்பொ ழுதும் தடையாகவே இருக்கின் றது.  அந்த பேரினவாதத்தை அனுசரித்து, சாத்தியமான தந் ரோபாய நடவடிக்கையின் மூலம், உள்ளே பகவைத்து, உதட் டில் உறவாடி, நமது அபிலாசை களை பூர்த்தி செய்யவேண்டும், அல்லது இந்த கதையில் வரும் சுண்டெலி போல, துப்பாக்கி எடுக்கவேண்டும், அதற்கான சாத் தியப்பாடு இனி இல்லை, எனவே உள்ளே பகைவையடா தமிழா! சிங்கள பெரும்பான்மையுடன், உதட்டில் ஒட்டி உறவாடடா தமிழா! இனி கதைக்கு வருவோம்!
முன்பொரு காலத்தில் ஒரு சுண்டெலி இருந்தது. அது மிகவும் பசியோடிருந்தது. ஒரு சிறிய வீட்டின் சிறிய சமையலறையில் இருந்த, பாலாடைக் கட்டியின் ஒரு சிறிய துண்டைச் சாப்பிட வேண்டுமென்று அது விரும்பியது. உறுதியான முடிவோடு இந்தச் சுண்டெலி, பாலாடைக் கட்டியின் சிறிய துண்டை எடுப்பதற்காகச் சிறிய சமையலறைக்குச் சென்றது. ஆனால், அதன் வழியில் ஒரு பூனைக்குட்டி குறுக்கிட்டது. மிகவும் பயந்து போன சுண்டெலி, ஓடிவிட்டது. அதனால் சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக் கட்டியை எடுக்க முடியவில்லை. அப்போது, சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக் கட்டியை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது. “எனக்குத் தெரியும். ஒரு சிறிய தட்டில் பாலை ஊற்றி நான் வைத்துவிடுவேன். பூனைக்குட்டி பாலைக் குடிக்கப் போகிறது. ஏனென்றால், பூனைக்குட்டிகள் பாலை மிகவும் விரும்புகின்றன. அப்போது, பூனைக்குட்டி பாலைக் குடித்துக்கொண்டிருக்கும்போது, அது கவனிக்காதபோது, நான் சிறிய சமையலறைக்குள் சென்று, சிறிய பாலாடைக் கட்டியை எடுத்துச் சாப்பிடப் போகிறேன். இது மிகவும் அருமையான யோசனை,” என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. அதன்பிறகு, அது பாலைத் தேடிச் சென்றது. ஆனால், பால் சிறிய சமையலறையில் இருந்தது. சிறிய சமையலறைக்கும் செல்வதற்கு சுண்டெலி விரும்பிய போது, பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது. மிகவும் பயந்துபோன சுண்டெலி ஓடிப்போய்விட்டது. அதனால் பாலை எடுக்க முடியவில்லை. அப்போது, சிறிய சமையலறையிலிருந்து பாலை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது. “எனக்குத் தெரியும்.நான் ஒரு சிறிய மீனைத் தூரத்தில் வீசியெறியப் போகிறேன். அந்தச் சிறிய மீனைச் சாப்பிடுவதற்காகப் பூனைக்குட்டி ஓடிவிடப்போகிறது. அப்போது, பூனைக்குட்டி சிறிய மீனைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அது கவனிக்காதபோது, நான் சிறிய சமையலறைக்குள் சென்று, சிறிய பாலாடைக் கட்டியை எடுத்துச் சாப்பிடப் போகிறேன். இது மிகவும் அருமையான யோசனை,” என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக் கொண்டது. அதன்பிறகு,அது சிறிய மீனைத் தேடிச் சென்றது.ஆனால் சிறிய மீன் சிறிய சமையலறையில் இருந்தது. சிறிய சமையலறைக்குள் செல்வதற்குச் சுண்டெலி விரும்பியபோது,பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது. மிகவும் பயந்துபோன சுண்டெலி ஓடிப்போய்விட்டது. அதனால் சிறிய மீனை எடுக்க முடியவில்லை. அந்தச் சுண்டெலி தனக்குத் தேவையான சிறிய பாலாடைக்கட்டி, பால், சிறிய மீன் ஆகிய அனைத்தும் சிறிய சமையலறையில்தான் இருக்கின்றன என்பதையும், பூனை தன்னை விடாது என்பதால் தன்னால் சமையலறைக்குள் செல்ல முடியாது என்பதையும் அப்போதுதான் உணர்ந்தது. அந்தச் சுண்டெலி அப்போது, “போதும்!போதும்!” என்று சொல்லிவிட்டு, இயந்திரத் துப்பாக்கியை எடுத்து பூனைக்குட்டியைச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சிறிய சமையலறைக்குச் சென்று பார்த்தது. சிறிய மீன், பால், சிறிய பாலாடைக் கட்டி ஆகிய அனைத்தும் கெட்டுப் போயிருந்ததையும், அவற்றைச் சாப்பிட முடியாது என்பதையும் கண்டது. எனவே அது பூனைக்குட்டி கிடந்த இடத்திற்குத் திரும்பி வந்தது. அந்தப் பூனைக்குட்டியைத் துண்டு துண்டாக வெட்டியது. அதை வறுவல் செய்தது. பிறகு, தனது நண்பர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தது.அவர்கள் அனைவரும் குட்டிப்பூனை வறுவலைச் சாப்பிட்டார்கள், பாடினார்கள், ஆடினார்கள், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...