பின் தொடர்பவர்கள்

0016 கண்ணீரும் கதை சொல்லும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0016 கண்ணீரும் கதை சொல்லும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 அக்டோபர், 2020

0016 கண்ணீரும் கதை சொல்லும் பேசாலைதாஸ்

 கண்ணீரும் கதை சொல்லும்   பேசாலைதாஸ்

(அண்மையில் முகநூலில்,என் மனதை நெருடிய ஒரு பதிவு கதையாகிறது)

            ஸஹீராவுக்கு தன் மனதின் கவலைகளை அடக்கிக்கொள்ளமுடி யவில்லை, தன் எண்ணத்தில் உதிக் காத அந்த மானுட உணர்வு, அந்த பிஞ்சுக்குழந்தை களுக்கு வந்ததே என்ற அந்த குற்ற உணர்வு அவள் உள்ளத்தை மேலும் அழுத்தி கொண் டிருந்தது, வீடு திரும்பி வெகுநேரமா கியும் அவளுக்கு எந்தவேலைக ளும் கவனம் செல்லவில்லை, வகுப்பறை நினைவுகள், எண்ணச்சுழற்ச்சியாக அவள் மன தில் சதா வந்து வாட்டிக் கொண்டே இருந்தது.

                                                               ஸஹீராவின் கணவன் வீடு திரும்பிவந்தான், வழமையாக சிரித்தமுகத்தோடு வாசல் திறக்கும் கதவு திறக்கப்படவி ல்லை. மேசையில் தனக்காக காத்திருக்க கும் உணவுகளும், அதோனோடு காத்திருக்கும் ஸஹீராவும் இல்லை. எல்லாம் வினோதமாக இருந்தது அவ னுக்கு, ஸஹீராவுக்கு என்ன நடந்தது என்று தனக் குள்ளே கேட்டவண்ணம், ஸஹீரா ஸஹீரா என்று அழைத்தவண்ணம் படுக் கறை சென்றான் அவன். சிவந்து வீங்கிய கண்களும் கண்ணங்களுமாக ஸஹீரா படுக்கையில் இரு ந்து எழுந்து, உட்கார்ந்தபடியே தன் கணவனை பார்த்து மீண்டும் அழுதால், என்ன ஸஹீரா என்ன நடந்தது என்று கேட்க பள்ளியில் நடந்ததை அப்ப டியே ஒப்பிவித்தாள் ஸஹீரா!

                                                                                 ஸஹீரா ஒரு முன்பள்ளி ஆசிரியர், பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத் தினார் ஸஹீரா. அதில் வெற்றி பெறும் மாணவி க்கு புதியதொரு சப்பாத்துச் சோடி வழங்கப்படும் என்றும் அவள் கூறி னார். அனைத்து மாணவிகளும் மிகு ந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர்.  இறுதியில் அவர்களது விடை களை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரி யானவையாகக் காணப்ப ட்டன.  ஸஹீரா யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரது பெயர்களையும் எழுதிப் போடுமாறு கூறினார்.

                                                                              அனைவரும் எழுதிப் போடவே ஸஹீரா அப்பெட்டியைக் குழுக்கி அதில் ஒரு காகிதத்தை எடுத்தாள். அதில் "உதுமா" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசை வழங்கினாள் ஸஹீரா டீச் சர். வழங்கப்பட்டது. அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் வறிய பிள்ளை. பல காலமாகவே தேய்ந்து போயிரு ந்த சப்பாத்தினை அணிந்து வந்த இம் மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. 

                                                             ஸஹீரா டீச்சருக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான், அதைவிட தனது மாணவர்கள் அனைவரும் கருணை உள்ளத்தோடு வாழ் வது பற்றி பெரு மிதத் துடன் வீடு திரும்பினாள். வீடுதிரும்பிய ஸஹீரா டீச்சருக்கு என்ன தோன் றியதோ தெரியவில்லை, மாணவர்கள் பெயர் களை எழுதிபோட்ட அந்த சீட்டுப் பெட்டியோ என்னை ஒருமுறை திறந்து பார் என அழைப்பாதாகவே ஸஹீரா வுக்கு தோன்றியது, உடனே அவள் பெட்டியை திறந்து, பெயர் எழுதப்பட்ட சீட்டு க்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசிக்க தொடங்கினாள், முதாவது சீட்டில், உதுமாவின் பெயர், அடுத்தது அதுவும் உதுமா, அடுத்தது அதுவும் உதுமா, கடை சியில் எல்லா சீட்டுக்களிலும் உதுமா என்றே எழுத்தப்பட்டிருந்தது. அனைத்து மாணவி களும் தங்களது பெயர் களை எழுதாமல் வகுப்பில் வறிய மாணவியா கிய "உதுமா" வின் பெயரையே எழுதி யிருந்தனர். அதாவது அனைத்து மாணவிகளும் அவ்வறிய மாணவியின் நிலை யைப் புரிந்து அம்மாணவிக்கு சப்பாத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முனைந்தனர். அசடே இதற்காகாவா கண்ணீர் சிந்தி அழுகின்றாய். இந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறி இருக்கவேண்டும் என்று சொல்லி, ஸஹீராவை அப்படியே வாரி அனைத்து மகிழ்ந்தான் ஸஹீராவின் கணவன்!   அன்புடன் பேசலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...