பின் தொடர்பவர்கள்

0397 அது முடியாத காரியமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0397 அது முடியாத காரியமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

0397 அது முடியாத காரியமா?

அது முடியாத காரியமா?

அன்பர்களே! எதுவானாலும் முயன்று பார்ப்பது வெற்றி க்கான முதற்படி. அதற்கு கொஞ்சம் துணிச்சலும் புத்தி சாலித்தனமும் வேண்டும். சிலர்சொல்லக்கேட்டிருக்கின்றேன். மயிரால் மலையை கட்டி இழுக்க‌வேண்டுமாம். வந்தால் மலை, போனால் மயிர்! வென்றாலும் தோற்றாலும் பாதகமற்ற நிலைதான். இது யாதார்த்தத்திற்கு பொருந்தாத விடயம் தான் ஆனாலும் முய்ன்றுதான் பார்ப்போமே என்பவர்க ளுக்கு இந்த கதை நன்றாக பொருந்தும்.

                                                                                ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு வேற, ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு.
இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன்வந்தாங்க. ராஜா, தகுதி உள்ள எல்லாரையும்அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமு ள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோக த்தில் செஞ்சது. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம்  ராஜா  பேசினாரு. இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம்இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்கமுடியல ! நம்மால எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க. இதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு! . ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டி க்கிட்டு போனார். எல்லாரும்அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டு ருந்தாங்க!! இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும்கூறினார் . கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்றும்தயங்கினர் ! ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய்கையை வெச்சு தள்ளி பார்த்தான். அடஎன்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!! பல பேர் தயங்குவதனாலும், ஒருவர் சொல்வ தனாலும் முயற்சி செய்யாமல்இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!என ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியைவழங்கினார்… “அது முடியாத காரியம்” என எப்போது உன்காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள் நீ சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய்என்று !!!!!!                  அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...