பின் தொடர்பவர்கள்

0102 தூக்கில் போட வேண்டும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0102 தூக்கில் போட வேண்டும். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0102 தூக்கில் போட வேண்டும்.

தூக்கில் போட வேண்டும்.

முல்லா "முல்லா மிகவும் புத்திசாலி " என்று அரச சபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன் னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.
ஒரு நாள் அரச சபை கூடியபோது, அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, முல்லா, " உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும்; பொய்யாயின், உங்களைத் தூக்கிலி டுவேன் , எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள் " என்றார்.
                             "முல்லா உண்மையைக் கூறினாலும் இறந்து விடுவார்; பொய்யைக் கூறினாலும் இறந்து விடுவார். ஆதலால்; முல்லா இன்று தொலைந்தார்" என்று சபையோர் வருந்தினர்கள். முல்லா மன்ன ரைப் பார்த்துப் அமைதியுடன், " மன்னரே , நீங்கள் என்னைத் தூக்கில் போடிவீர்கள் " என்று சொன்னார்.
முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.
முல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்படவேண்டும் , அவ்வாறு வெட்டப் பட்டால், அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல், தூக்கில் போட வேண்டும். முல்லா கூறியது பொய்யாயின் முல்லா வத்தூக்கில் போடவேண்டும் அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் , உண்மையை கூறினால் அவரைத் தூக்கில் போடா மல் தலையயை வெட்டவேண்டும். எனவே, புத்திசா லித்தனமாக பதில் சொன்ன முல்லாவை மன்னர் பாராட்டினார், சபையோர் மகிழ்ந்தனர்


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...