பின் தொடர்பவர்கள்

0444 கா கா போபோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0444 கா கா போபோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மார்ச், 2017

0444 கா கா போபோ

கா,,கா,,,,,,,போ,,,,,போ,,,,,,,, 


காக்கைகள் கூட்டத்தை எனக்கு பிடிக்காது
காக்கைகளுக்கும் என்னை பிடிக்காது
காக்காய் முட்டைகளை மரமேறிக் களவாடி
கண்ணாமூச்சி விளையாடிய, என் கிறுக்கு பருவம்
காக்கைகளுக்கு இன்னும் கனவில் வருகின்றது.

கக்காக்களையும், காய்ந்த பிணங்களையும் கொத்தும்
காக்கைகள் கூட்டத்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது
காய்ந்த சருகுகளை, செத்த பிணங்களையும்
கடைத்தெருவிலும், அடுத்தவன் வளவிலும் எறியும் எனக்கு
கனவிலும் காக்கைகள் ஒருபோதும்  வருவதில்லை

காக்கைகள் கறுப்பு என்று தம்மைக் கருதிக்கொள்ளாமல்
கறுப்புக்குயிலுக்காய் அடைகாத்துக் கொடுப்பதால்
காக்கைகள் கூட்டத்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது
கா,,கா,,கா எனக்கரைந்து, கிடைத்தை பகிர்ந்துண்ணும்
காக்கைகள் கூட்டத்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது!
                                                                       பேசாலைதாஸ்

"எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்."

 "எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்." பேசாலைதாஸ் ஒருமுறை பூமிக்கு கடவுள் வந்தார்...! "என்ன வேண்டும் கேளுங்கள், தருகிற...