பின் தொடர்பவர்கள்

0084 காயத்திரி ஜபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0084 காயத்திரி ஜபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0084 காயத்திரி ஜபம்

காயத்திரி ஜபம்

காயத்திரி ஜபம்

சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதி யூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செ ய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக் காரன் எதிர்பட்டான். அவனைப் பார்த்த அகபர், இந்த இனத்தவர்களுக்குப் பிச்சை எடுப்பது தவிர வேறு பயனுள்ள தொழிலெதுவும் செய்யத் தெரியாதா? என்று கேட்க, பீர்பாலின் மனத்தில் முள்ளெனத்தை த்தன அந்த வார்த்தைகள். பிறகு அந்தப் பிச்சைக்கார னைச் சந்தித்துக் கேட்டபொ ழுது தன்னுடையபெரிய குடும்பத்தைக் காப்பற்ற வேறு வழி புலப்படாததால் பிச்சையெடுக்க முற்பட் டதாகவும், இதன் மூலம் நாளொன்றுக்கு 25 காசுகள் கிடைக்கின்றன என்றும் கூறினான்.
                      அதைச் செவியுற்ற பீர்பால் அவன் பிச்சை யெடுப்பதை விட்டு விட்டு தினந்தோறும் காலை  ஸ்நானம் செய்துவிட்டு 10 தரம் காயத்திரி ஜபம் செய்வதாக இருந்தால் அன்றாடம் அவனுக்கு 50 காசுகள் தருவதாகக் கூறினார். அந்த ஏழையும் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு பீர்பால் சொன்ன படி ஜபம் செய்து வந்தான். பயனெதுவும் கருதாமல் நாள் பூராகவும் காயத்திரி ஜபம் செய்து வந்ததால் அவன் முகத்திற்கு ஒரு அசாதரணமான காந்தி ஏற்பட்டது. இதை அறிந்த பீர்பால் அந்த ஏழையை அணுகி தினம் 108 தடவை காயத்திரி ஜபம் செய்தால் அவனுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொன் னார். அதற்கும் ஒப்புக்கொண்டு அந்த ஏழையும் தீவி ரமாக ஜபம் செய்தார்.
                                          ஒரு நாள் அவனுக்கு அஞ்ஞான இருள் நீங்கியது. அவனுக்கு அமோகமான் ஆன்மீக வளர்ச்சியும் தெய்வீக ஒளியும் ஏற்ப்பட்டு, தினந்தோ றும் திரளான மக்கள் அவனை நாடி வணங்கி அருள் பெற்று வந்தனர். ஒரு மாதம் ஆனதும் அந்த ஏழை பணம் வாங்க வராததால் பீர்பாலே அவன் வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தார். ஆனால் அவன் பணிவு டன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அவனுக்குச் சிறந்த ஆன்மீக வழியைக் காட்டியதற்காக பீர்பாலு க்கு நன்றி தெரிவித்தான்.
                                                       மறுநாள் பீர்பால் அக்பரை அந்த ஏழை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் முகத்தில் தென்பட்ட தேஜஸையும் அங்கு அருள் பெற வந்த மக்களையும் பார்த்து அக்பர் மிக ஆச்சரி யப்பட்டார். அக்பரும் அவ்ர் காலில் விழுந்து அருள் புரியுமாறு வேண்டினார். சில மாதங்களுக்கு முன் நீங்க்ள் இகழ்ந்து பேசிய அதே பிச்சைக்காரன் தான் இவன் என்று சக்கிரவர்த்தியின் காதில் கிசு கிசுத்தார் பீர்பால். சக்கிரவர்த்தி நம்பாமல் அந்த எழையை இந்த மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்டார். அவ்னும் நடந்ததைச் சொன்னான். காயத்திரி ஜபம் செய்ததால் வந்த பெருமை என்று பீர்பால் விளக்கினார்..


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...