பின் தொடர்பவர்கள்

0043 அவன் அவனாகவே இருக்கின்றான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0043 அவன் அவனாகவே இருக்கின்றான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மார்ச், 2021

0043 அவன் அவனாகவே இருக்கின்றான்

 0043 அவன் அவனாகவே இருக்கின்றான் பேசாலைதாஸ்

                          அன்பர்களே நம்மில் ஒரு பழக்கமுண்டு. நமது வேலைகளை கடமைகளை சரிவரச்செய்வதில்லை.  மாறாக அடுத்தவ்ர் வேலைகளில், அவ ர்களின் பிரச்சனைகளில். நமது மூக்கை நுழைத்து, குடும்பங்க ளில் பிரச்சனைளை ஏற்படுத்தி விடுவார்கள். சிலவேளைகளில் மற்றவர்கள் செய்யும் சேவைகளில் குற்றம் கண்டுபிடித்து, தீர்ப் பிடுவார்கள். மற்றவர்களை தீர்ப்பிட நான் யார்? நீங்கள் யார்? அவரவர் அவர்களின் வேலையை செய்கின்றார்கள் அவ்வளவு தான். இதை அழகாக விளக்குகின்றது, இந்த குட்டிச்சம்பவம்!

ஒரு ஞானியிடம் ஒருவன் வந்து நக ரில் புல்லாங்குழ்ல் வாசிக்கும் ஒருவ னைப்பற்றி சொன்னார் அதற்கு ஞானி அவன் நல்ல கலைஞன் என்றார். அதே நேரம் இன்னொருவன் ஞானியிடம் வந்து, புல் லாங்குழல் வாசிப்பவன் நல்ல கைதேர்ந்த கலை ஞன் என்று கூறினான். அதற்கு ஞானி அவன் திருடன் ஆயிற்றே என்று சொன்னார். ஞானியின் முரண் பாடான‌ வார்த்தையில் வந்த இருவருமே குழம்பிப் போனார்கள். என்ன ஞானியாரே என்ன குழப்புகின் றீரே என்று அவர்கள் சொன்னார்கள் . ஞானியோ அமைதியாக இல்லை நான் சீர் செய்கின்றேன், சமப் படுத்துகின்றேன்.. புல்லாங்குழல் வாசிப்பவன் என் னைப்பொறுத்தவரை திருடனுமில்லை, கலைஞ னும் இல்லை. அவன் அவனாகவே இருக்கின்றான்.

அவனை தீர்ப்பிட நான் யார்? நீங்கள் யார்? அவரவர் அவர்களின் வேலையை செய்கின்றார்கள் அவ்வ ளவுதான். நீங்களும் உங்களின் வேலைகளை கவனி யுங்கள் அதுபோதும் என்று சொன்னார் ஞானி.

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...