பின் தொடர்பவர்கள்

0367 தேடித் தெரிந்துக்கொள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0367 தேடித் தெரிந்துக்கொள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஏப்ரல், 2016

0367 உனக்குள்ளேயே தேடித் தெரிந்துக்கொள்

உனக்குள்ளேயே தேடித் தெரிந்துக்கொள்
தன்னை அறிந்து கொள்வதே வாழ்வின் மிகப்பெரிய வெற்றி, அதுவே வாழ்வின் நிறைவு. நீ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடாலாம், தாழ்ந்தாலும், உயர்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம் என்பது எவ்வளவு உண்மையாகின்றது. சும்மாவா சோக்ரடீஸ் சொன்னார் You know yourself  உன்னையே நீ அறிந்து கொள் என்று, வாழ்வில் எத்தனைபேர் கடைசி வரை தன்னை அறியாமால், மற்றவர்களையும் புரிந்து கொள்ளாமல் மடிந்து போகின்றார்கள்? அண்மையில் கிரீஸ் நாட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருந்தேன், தீவை சுற்றி பார்க்க ஒரு சிறு கப்பலை வாடகைக்கு அமர்த்தினேன், அந்த கப்பல் மாலுமியோடு கிரேக்க தத்துவம் பற்றி கதைக்க தொடங்கினேன், முதலில் அவன் கடவுள் இல்லை, நம்மை அறிந்து கொள்வதே கடவுளை தேடும்முதற்படி என்று சொல்லி என்னை சிந்தனையில் மூழ்கடித்தான். தன்னை எவன் அறிந்து கொள்கின்றானோ அவன் இறப்புக்குப்பின் எங்கே இருக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கின்றான் என்ற மாபெரும் தத்துவத்தை மிக இலகுவாக எனக்கு புரியவைத்தான். அப்போது எனக்கு ஒரு கதை சட்டென்று நினைவுக்கு வந்தது,,,,,,,,,,,,,,,ஒரு பெரிய பணக்காரர் தன் பெரிய மாளிகையில், மனைவி, குழந்தைகளுடன் எந்த ஒரு குறையுமின்றி மகிழ்வாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் மனம், மிகவும் நிம்மதியிழந்து இருந்தது. அதனால் அவர் ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார். தன் குதிரையில் பல ஊர்களுக்குச் சென்று பல துறவிகள், ஞானிகள் மற்றும் குருக்களைச் சந்தித்து, அவர்கள் கால்களில் தங்கத்தையும், வைரத்தையும் வைத்து, தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். இருப்பினும் அவர்களால் அவருக்கு ஞானத்தைத் தரமுடியவில்லை. அப்போது அவரிடம் அந்த வழியாக வந்த ஒருவர், இந்தக் காட்டின் உட்பகுதியில் ஒரு குகையில் ஜென் குரு வாழ்ந்து வருகிறார். அவரிடம் நீங்கள் சென்று உங்கள் பிரச்சனையைச் சொன்னால், அவர் கண்டிப்பாகத் தீர்த்து வைப்பார் என்று கூறினார். ஒரு மூட்டை நிறையப் பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த காட்டின் உட்பகுதியில் அந்த குருவைத் தேடிச் சென்றார் இவர். எப்படியோ நீண்ட நாள் அலைச்சலுக்குப் பிறகு, அந்தக் குருவின் குகையைக் கண்டுபிடித்து, அவரை வணங்கி தன் பிரச்சனையைக் கூறினார். பின் அந்த குரு அவரிடம், "நீ இங்கே எப்படி வந்தாய்" என்று கேட்டார். அதற்கு அவர், "குதிரையில்!" என்றார். பின் அவர், "அப்படியென்றால் எதற்கு ஞானத்தைத் தேடுகிறாய், முதலில் உன் குதிரையைத் தேடு!" என்று கூறினார். உடனே பணக்காரர் அவரிடம், "என்ன குருவே, முட்டாள் தனமாக பேசுகிறீர்கள், என்னிடம்தான் குதிரை இருக்கிறதே, பின் எதற்கு நான் தேட வேண்டும்" என்று சொன்னார். பிறகு குரு சொன்னார், "எப்படி உன்னிடம் குதிரை இருக்கிறதோ, அதேபோல்தான் ஞானமும் உன்னிடமே இருக்கிறது. ஆகவே அதைத் தேடி வெளியே செல்லாமல், உனக்குள்ளேயே தேடித் தெரிந்துக்கொள்" என்று கூறி, குகைக்குள் சென்று தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார். என்னைத்தோண்டி ஞானம் கண்டேன்  அத்துதான் என்கட்சி என்று கவிஞன் உரைத்தது  . எத்தனை நிஜயம்? சிந்தனையில் உங்களை மூழ்கடிக்க மீண்டும் வருவேன்அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் நோர்வே

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...