காணாமல் போகும் காதல்!
அன்பர்களே! நம்மில் ஏராளமா னவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள், அவர்களின் இல்லற வாழ்வை எடுத்துப்பார்த்தால் விர க்தியும், அதிருப்தியுமாக நிறைந்து வழிகின்றது. இதற்கான காரனத் தை நான் எண்ணிய போது, என் சிந்தையில் உழன்ற எண்ணங் களை எழுத்தாக வடித்துள்ளேன்.
ஆணுக்கும், பெண்ணு க்கும் இடையில் உடல் ரீதியான கவர்ச்சி இருப்பது இயற்கையின் நியதி. இருவேறுவிதமான உட லமைப்புகள் இருப்பதுதான் அந்த வசீகர த்தின் அடிப்படை. ‘உடலளவில் என் மனைவி அல்லது காதலி என்னி லிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டும். என்று எண்ணுகின் றோம் ஆனால், மனதளவில் நம் எண்ணப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கி ன்றோம்’ இது வரம்பு மீறிய எதிர்பார்ப்பு. அதனால்தான் காதல் என்று நாம் நினைப்பது மூச்சுத் திணறுகிறது.
திருமணத்திற்கு முன், உங்கள் காதா லியை சந்திக்கச் செல்கையில், அழகாக உடுத்தி, இனிக்கப் பேசினீர்கள். உணவு விடுதியிலோ, தியே ட்டரிலோ செலவு செய்த சிலமணி நேரங் களில், இருவரும் தத்தம் குறைகளை மறைத்து, அவரவரைச் சிறப்பாகக் காட்டிக் கொண்டீர்கள். அது ஓர் உண்மை நிலை. திருமணமாகி குடும்ப மாக சேர்ந்து வாழும் பொழுது, அவரவர் வாழ்க்கை முறை, செயல்பாடு கள் அதாவது பல்துலக்கும் முறையோ, சமைத்துப் பரிமாறும் விதமோ, படுக்கையில் குறட்டைவிடும் ஒலியோ உங்களுக்குப் பிடிக்காமல் போக லாம். அது இன்னோர் உண்மை நிலை.
இங்கு நாம் என்ன கவனிக்கின்றோம். உலகம் அழிந்தாலும், நிலவு விழுந்தாலும், உன்னை மறக்கமாட்டேன் என்று சத்தி யம் செய்து, நிலவே மலரே உயிரே உலகே என்று உருகிய காதல், பின்நாளில் வேம்பாக கசப்பது ஏன்? ஏன் பிரியமே இல்லாமல் சேர்ந்து வாழ்கிறார்கள்? இது காதலின் குற்றமல்ல; இரண்டு மாறுபட்ட உண்மை நிலைகளைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களின் குறை பாடு. உங்கள் பிரச்சினை என்ன தெரியுமா? காதல் என்பது திருமணத் துக்கு முதல்படி என்று நீங்கள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள். ஒருத்தியைக் காதலியாக வைத்துக் கொள்வதற்கு அவளிடம் காட்டிய அதே உணர்வை, மனைவியாக வைத்துக் கொள்வதற்குக் காட்டத் தேவை யில்லை என்று முட்டாள்தனமான முடிவு செய்துவிட்டீர்கள்.
இன்று, உங்கள் காதலில் லயிப்பு இல்லை; அதனால் தான் காதல் காணாமல் போகின்றது. காதல் என்பது குறிப்பி ட்ட காலம்வரை மட்டுமே வாழ்ந்து முடிவதல்ல. உருவ மாற்றத்தாலோ, உறவாகி விட்டதாலோ, வயதாலோ உதிர்ந்து போய் விடுவதில்லை காதல். காதலின் சுகம் பற்றி அறிய, பழைய வாழ்வின் நினைவுகளை த்தான் அசை போட வேண்டும் என்பது துரதிர்ஷ்டமான மன ப்போக்கு. அன்றன்று நடக்கும் இன்பம், அவ்வப்போது வைத்து க்கொள்ளும் உடல் உறவில், செய்த கிளுகிளுப்பான சமாச்சார ங்களை எண்ணி எண்ணி அசை போட்டாலே காதல் வெள்ளம் பெருகும்! இதனை ஒரு சின்ன சம்பவம் ஊடாக விளக்கலாம் என் துணிகின்றேன்.
ஒரு வைத்தியசாலையின், அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களாக, சரியாக காலை எட்டு மணி தொடக்கம் ஒன்பது மணிக்கு இடையில் நோயாளிகள் இறந்து கொண்டிருந்தனர் டாக்டர்மா ர்களுக்கு ஒரே குழப்பம்.. டாக்டர்கள் கூடினர். “தீவிர சிகிச்சைப் பிரிவில், தினம் காலை எட்டு மணிக்கு ஒரு நோயாளி இறக்கிறார். ஏன்?” மருத்துவ ரீதியாக எந்த விளக்கமும் திருப்தி தரவில்லை. நிபுணர்களுக்கே இந்த விஷயம் சவாலாக இருந்தது. “அந்த நேரம் பேய், பிசாசு போன்ற ஏதோ வொரு அமானுஷ்ய சக்தி உள்ளே வந்து உயிரைப் பறித்துப் போகி றதோ!” என்றார் ஒரு டாக்டர்.
எதுவானாலும், அதைக் கண்டு பிடித்துவிடுவது என்று முடிவானது. ஒரு குறிப்பிட்ட தினத்தில் டாக்டர்கள், தத்தம் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி, அங்கே ஒளிந்திருந்து கவனித் தனர். சரியாக எட்டு மணிக்குக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தாள், துப்புரவு செய்யும் பெண்மணி, உயிர்காக்கும் இயந்திரத்தின் பிளக்கைப் பிடுங்கினாள். அங்கே வேக்கும் கிளீனரின் Vacum Cleaner பிளக்கைச் செருகி அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அன்பர்களே அந்த வேலைக்காரி செய்வதைப் போலவே நாமும் இரசனை என்ற பிளக்கை கழற்றி விட்டு காதலை எதிர் பர்க்கின்றோம் அதனால் காதல் மெல்ல சாகின்றது. காதல் தானாக சாகாது. நீங்களாக அதன் கழுத்தைத் திருகிக் கொன்றால்தான் உயிர் விடும். அன்புடன் பேசாலைதாஸ்