பின் தொடர்பவர்கள்

0230 ஒருவர் நிகழ்காலத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0230 ஒருவர் நிகழ்காலத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

0230 ஒருவர் நிகழ்காலத்தில் செய்வதே அவரின் எதிர்காலம்!

 ஒருவர் நிகழ்காலத்தில் செய்வதே அவரின் எதிர்காலம்! 

அன்பர்களே நாம் எதை விதை கின்றோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். அது வும் விதைப்பது நிகழ்காலத் தில் நடந்தால்தான் எதிர்கா லம் அறுவடைக்கு தயாராக இருக்கும். நமக்கு தரப்பட்ட வாழ்வதற்கான உரிமை ஆகக்கூடிய காலம் நூறு ஆண்டுகள், அதிலும் குழுந்தைப்பருவம், இயங்கமுடியாத வயோதிப காலம் இவைகள் தவிர்த்தால் செயல்பாடுகளுடன் கூடிய காலம் வெகு சொற்பமே இந்தகாலத்தில் நாம் என்ன செய்கின் றோமோ அதுவே திருப்பி நமக்கு தரப்படும். அன்போடு பாசத் தோடு நம சகோதரங்களுடன் பகிர்ந்து வாழ்ந்தால், இப்பொழு தும், பூவுல வாழ்வின் பின்பும் இன்பமாய் வாழமுடியும் காடுதி ருத்தி நாட்டை உருவாக்கிய ஒரு புத்திசாலி மன்னரின் கதை சிந்தனைக்கு விருந்தாக விரிகின்றது. அந்த சிறிய நகரத்திற்கு யார் வேண்டுமானாலும் மன்னராக வரமுடியும். ஆனால், அந்த ப்பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டுகள் முடிந்த அடு த்த நாளே மன்னர் ஆற்றின் மறுகரையிலுள்ள காட்டிற்குச் சென்று விட வேண்டும். அந்தக் காட்டில் நுழைந்தால் வனவில ங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த நிபந்தனைகளுக்கு ஒப்பு க்கொண்டவர் மட்டுமே அந்த நகரத்தில் அரியணையில் அமர முடியும். இப்படி ஒரு சட்டமிருந்தது. இதனை ஏற்று மன்னராக இருந்த ஒருவரின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்து, அவரை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னர் சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றார். தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு கோபத்துடன், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! அரியணையைக் கொண்டு வாருங்கள்!'' என்று கூறினார். சிறிது நேரத்தில் அலங்கரிக்கப் பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறு கரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னர் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்த வர் படகோட்டியே! காரணம், இதுவரை அவர் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னரும் மகிழ்ச்சியாகச் சென்றதி ல்லை. படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டார் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?'' ''தெரியும் மறுக ரைக்குச் செல்கிறேன்!'' ''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?'' ''தெரியும். நானும் திரு ம்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!'' ''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?'' ''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையா டிக் கொன்று விட்டார்கள்! இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியவகைகள் பயிராகியுள்ளன. மூன்றா மாண்டின் முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்களும், தொழிலாளர்களும் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண் மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்! நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வா கம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைக ளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர். இப்போது நான் காட்டிற் குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னராக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்ம னைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றார் மன்னர். படகோ ட்டி வியப்பில் ஆழ்ந்தான். ஆம். ஒருவர் நிகழ்காலத்தில் செய்வதே அவரின் எதிர்காலம்! அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...