பின் தொடர்பவர்கள்

0521 இயேசு கையாலாகதவரா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0521 இயேசு கையாலாகதவரா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

0521 இயேசு கையாலாகதவரா?

இயேசுவே கையாலாகாதவரா‌?

                                 
  சினேகா வழமைக்கு மாறாக இன்று முகவாட்டம் கொண்டு, இறுமிக்கொண்டு, சற்று சிணுங் கிக் கொண்டிருந்தாள். அவளின் இந்த செய்கைகளுக்குப் பின்னால் என்ன காரனம் என்பதை சினேகா வின் அம்மா மேரிக்கு தெரியாமல் இல்லை. நாளை கோவில் பெரு நாளுக்கான வேஸ்பர் தொடங்குகி ன்றது. அடுத்த நாள் கோவில் பெருநாள். கிராமத்து சனங்கள் எல்லோரும், தாலி, நகைகளை அடைவு மீட்பதும், விலை உயர்ந்த சாரி உடுப்புகள் வாங்குவதிலும் மும்முரமாக இருந்தனர். அவர்களின் இந்த முனைப்புக்கு ஈடு கொடுக் கு ம் வண்னம் கடந்த வாரங்களாக மன்னார் மாவட்ட கடற்பரப்பினில் நல்ல இறால் பாடு.  அப்படியென்றால் பெண்களின் பெருநாள் கனவுகள், எதிர்பார்ப் புகளை சொல்லவா வேண்டும்! இந்த முறை சம்மாட்டியார் மகள், புஸ்பம் உடுத்தபோகும் சாரியின் விலை என்னவாக இருக்கும் என்பது, ஊரின் மீடியா மனங்களின் ஆவலான எதிர்பார்ப்பு. இந்த தடவை சாராய தவறனை வைத்திருக்கும் அருளின் மனைவி, வனஜா உடுத்தபோகும் சாரியின் விலை கிட்டதட்ட ஒரு இலட்சத்தை தாண்டும் என்பது உள்ளூர் மீடியாக்களின் கனிப்பு.

                                                         நினேகாவுக்கு சுமாரான ஒரு சுரிதார் மட்டும் பொதுமானதாக இருந்தது, அதற்கும் அவளுக்கு வழியில்லை. சினேகா இப்பதான் காதலில் விழுந்துள்ளாள், அவளின் பிரியமானவனுக்கு முன் னாள் ஒரு நல்ல சுரிதாருடன், பெருநாள் அன்று அவனுக்கு வாழ்த்து சொல்லவேண்டும் என்று மனம் ஏங்கியது, அது முடியாது என்று சினே காவுக்கு தெரியும். அவள் என்ன செய்வாள்? அவளின் அப்பா ஒரு கச நோயாளி தம்பி தங்கைமார் உட்பட எல்லாமாக குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள், சினேகாதான் மூத்தவள். அவளின் அம்மா மேரியின் கடலை வியாபாரம், மீன் வெட்டுதல் இதில் தான் அந்த குடும்பம் சராசரி வாழ் க்கையோடு நகர்கின்றது. இந்த இலட்சணத்தில், சினேகாவின் சுரிதார் கனவு சிதைந்து போனது. திருநாள் திருப்பலியை நிராகரிப்பதைவிட வேறு வழி சினேகாவுக்கு தெரியவில்லை. அதற்குத்தான் உடம்பு சரியில்லை என்ற இந்த முன்னேற்ற‌ நாடக ஒத்திகை!

                                          திருநாள் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருக்கி ன்றது.  எல்லோரும் தரையில் உட்காரும் சந்தர்ப்பத்திற்காக, கோவில் விறாந்தாவில் புஸ்பம் அகங்காரமாக நிற்கின்றாள். எல்லோரும் தரை யில் உட்கார்ந்த பின்னார் நடுக்கோவிலில் நடந்து வந்தால் தானே சாரியின் பெறுமதி எல்லோர் கண்களுக்கும் படும், இந்த நுட்பம் புரியா தாவளா புஸ்பம்! புஸ்பம் கையை விசுக்கி விசுக்கி நடுக்கோவில் வாசலில் நடக்கின்றாள். அவளின் ஐந்து அடுக்கு காப்புகள் சப்தம் வேறு எழுப்புகின்றது, அந்த சப்தம் புஸ்பத்தின் செவிகளுக்கு இதமாக இருந் தது. பக்தர் எல்லோரும் புஸ்பத்தின் சாரிக்கு  -கண்களால் ஆராதனை நடத்தினார்கள். புஸ்பத்தின் சாரிதான், சாராய தவறனை அருளரின் மனைவி வனஜாவின் சாரியைவிட பெறுமதி வாய்ந்தது என்று தேர்தல் முடிவுகள் கோவிலுக்குள் வெளியாகிக்கொண்டிருந்தன.

                                                               சுவாமியார் கோவில் பலிபீடத்தில் பிரசங்க பிரங்கி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தார். இயேசு நம் எல்லோரின் துன்பங்களையும் தன் துன்மாக ஏற்று, நம் எல்லோரின் பாவங்களின் பரிகாரமாக தன் உயிரை சிலுவை சாவுக்கு கையளிக்க எல்லாம் வல்ல இறை மகன் தன்னையே தாழ்த்தி, சிலுவை மரணத்துக்கு ஒப்புவித்தார்! சுவாமியாரின் பிரசங்க தாக்குதல் எல்லோர் மனங்களையும் தாக்கிய தோ தெரியவில்லை, ஆனால் ஏழை மேரியின் ஏக்கம் மட்டும் இயேசுவை துடிதுடிக்கவைத்தது. தன் மகள் நினேகா பூசைக்கு வரமுடியாது போனதே என்று எண்ணி, எண்ணி அழுதாள் மனதுக்குள் புழுங்கி னாள்,இயேசுவே நீயும் என்னைப்போல கையாளாகாதவன் போல சிலுவையில் தொங்குகிறயா? என்று அந்த ஏழை மேரி மனதுக்குள் கண்ணீர் வடித்தாள்!   யாவும் கற்பணையே!  பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...