பின் தொடர்பவர்கள்

0363 சொல்லாதா சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0363 சொல்லாதா சொல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2016

0363 சொல்லாதா சொல்லுக்கு பொருள் ஏதும் இல்லை,,,,,,,,,

சொல்லாதா சொல்லுக்கு பொருள் ஏதும் இல்லை,,,,,,,,,

                                                      
 நூற்றாண்டில்  சீன நாட்டில் ஒரு மேதை   வாழ்ந்து வந்தார்  அவர் ஒரு  ஜென் துறவி. ஒருமுறை அவருடைய சீடர் ஒருவர், “குருவே, நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனதைக் கவர்ந்தவர் யார்?” என்று கேட்டார்.
ஜென் குரு  சிரித்தார். “வார்த்தைகளை மறந்த ஒருவரே, என்னுடைய மனதைக் கவர்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை” என பதிலளித்தார் மேதை.
“புரியவில்லையே!” என சீடர் முழிக்க, குரு விளக்கத் தொடங்கினார். “நீங்கள் ஓர் இடத்திற்குச் செல்ல பயணச்சீட்டு பதிவு செய்கிறீர்கள். பயணம் முடிந்தபின் அந்தப் பயணச்சீட்டை என்னச் செய்வீர்கள்?” என அவர் கேட்க,
“தூர வீசிவிடுவோம்!” என்றார் சீடர்.
“ஆக, பயணச்சீட்டு தூர வீசப்படும்வரை, அந்தப் பயணம் முடிக்கப்படவில்லை என்று அர்த்தம். இல்லையா?” என துறவி கேட்க, “ஆமாம் குருவே!” என பதிலளித்தார் சீடர்.
“அதேபோல், பாட்டிலில் இருக்கும் மருந்தைப் பயன்படுத்தி முடிந்தவுடன், பாட்டிலைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?” என ஜென் குரு கேள்வி கேட்க, “உண்மைதான். அதற்கென்ன?” என்றார் சீடர்.
“பயணச்சீட்டு மற்றும் பாட்டில் போலதான், நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், வார்த்தைகள் மறந்துபோகும். ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?” என்றார் ஜென் குரு.  ஆம் அன்பர்களே! நம்மக்குள் இருக்கும் கருத்துக்கள், நம்மை வாயை விட்டு வெளியே வந்த பின் அவை நமக்கு சொந்தமல்ல,
வார்த்தைகள் வெளிப்படும் வரை அவற்றின் மதிப்பு கூரைவும் இல்லை அத‌ன் பொருள்கள்.மாறுபடுவதும் இல்லை. இது என் சொந்த கருத்து, எனவே வார்த்தைகள் மட்டில் நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...