பின் தொடர்பவர்கள்

0517 ஒரே ஒரு முறைதான்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0517 ஒரே ஒரு முறைதான்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஏப்ரல், 2018

0517 ஒரே ஒரு முறைதான்!

ஒரே ஒரு முறைதான்!  

சிந்தனை சிறுகதை பேசாலைதாஸ்

அன்பர்களே நம்மில் சிலர் சூது என்ற மாயையில் சிக்கி தம்மிடம் உள்ள பணத்தை இழந்து பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக புலம் பெயர் நாட்டில் வாழும் பல ஈழத்தமிழர் பலர் இப்படி பணத்தை இழந்து தவிப்பதோடு மட்டும ல்ல அந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாது தவிக்கின்றனர். எனது மைச்சான் முறையான ஒருவர் அடிக்கடி சொல்லு வார். மலையை மயி ரால் கட்டி இழுக்க முயற்ச்சிக்கவேண்டும், வந் தால் மலை, வராவிட்டால் மயிர் ஒன்றே போகும் என்று சொலிச் சொல்லி, தனது பணத்தை சூதாட்ட இயந்திரத்தில் போட்டு வீணாக் குவார். இதனை விளக்க அருமையான உண்மை கதை ஒன்று, இன்று உங்களுக்காக‌
                                                              ஒரு ஊரில் பெரிய சூதாடி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அவ னைத் திருத்த முயன்றனர். சூதாடி யாருடைய பேச்சையும் காதில் போட் டுக் கொள்ளவில்லை. விரைவில் சகல சொத்துக்களையும் இழந்துவிட் டான். கடைசியாக ஒரு ரூபாய் மட்டும் அவனிடம் மிச்சம் இருந்தது. "அவன் மனைவி, "இப்போதாவது புத்தியுடன் நடந்து கொள்' என்றாள். அதைக்கேட்ட சூதாடி, "எல்லாம் போய்விட்டது. இந்த ஒரு ரூபாய்தான் மிச்சமிருக்கிறது. எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்புக் கொடு. யார் கண்டது? இந்த ஒரு ரூபாய் எனது சூழ்நிலையையே மாற்றியமைத்து விடவும் செய்யலாம்?' என்றான். 
                                                                                சூதாடிகள் எப்போதும் இப்படித்தான் பேசுவார்கள். "பல லட்சங்களை இழந்தாகிவிட்டது. இந்த ஒரு ரூபாய்க் காசு ஏன் கவலைப்படுகிறாய்? இதையும் சூதாட அனுமதி கொடு' என்று மனைவியிடம் கேட்டான். "எல்லாம் போய்விட்டது. அவர் கடைசி ஆசை யை ஏன் தடை செய்ய வேண்டும்' என்று நினைத்தாள் அவன் மனைவி. சூதாடி காஸினோவுக்குச் சென்றார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவனுக்கு வெற்றி கிடைத்தது. ஒரு ரூபாய் ஓராயிரமாக மாறியது. ஓரா யிரம் பல லட்சமாயிற்று இதுதான் கடைசிமுறை! இனி சூதாட மாட்டேன் என்று அந்த லட்ச ரூபாயையும் வைத்து சூதாடினான். எல்லாம் போய்வி ட்டது. வெறும் கையுடன் வீடு திரும்பினான். மனைவி அவனை பார்த்து, "என்ன ஆயிற்று' என்று கேட்டாள். "நான் எனது ஒரு ரூபாயை இழந்துவி ட்டேன் என்றான் சூதாடி" லட்சம் ரூபாய் பறிபோனதைச் சொல்லவில்லை
                                                     ஒரு ரூபாய்தானே இழகப்போகின்றோம் என்று எண்ணித்தான் பல கோடிக்கு ஆசைப்படுகின்றோம் ஆனால் நிஜ வாழ் வில் நம் ஆசைகள் அத்தனையும் நிறைவேறுவதே இல்லை. கடையில் மரணம் வாழ்வின் கதவை தட்டும். மரணத்தின்போது நீங்கள் கொண்டு வந்த உயிரை இழப்பதை உணர்வீர்கள். அந்த ஒன்று பறி போகும்போது உங்களிடமிருந்து அல்லது நீங்கள் சம்பாதித்த அனைத்தும் கைநழுவிப் போகின்றன. பல லட்சங்கள் சம்பாதித்து வைத்திருந்தாலும் நீங்கள் இறக்கும்போது அதை இங்கேயே விட்டுவிட்டுப்போக வேண்டியிருக்கி றது. "நீங்கள்' என்ற ஒன்றுதான் அதாவது ஆன்மா என்ற அந்த சூட்சும உருவம்,  உங்களுடன் செல்லும்.உங்களுக்குள் ஒன்றியிருக்கும் ஆன்மா வை  தெரிந்து கொண்டால் நீங்கள் வெற்றியாளராவீர்கள். அந்த ஒன்றைத் தெரிந்து கொண்டால் அதில் வசித்திட இயலும். அதுவே இறைத்தன்மை அதில் கலந்திடுவதே நன்மை பயக்கும்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...