பின் தொடர்பவர்கள்

0330 பாசமும் வீரமும் நிறைந்த தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0330 பாசமும் வீரமும் நிறைந்த தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 பிப்ரவரி, 2016

0330 பாசமும் வீரமும் நிறைந்த தமிழன் இராவணன் சிறந்தவன்...!!!!

பாசமும் வீரமும் நிறைந்த தமிழன் இராவணன் சிறந்தவன்...!!!! 
பாசமும் வீரமும் நிறைந்த தமிழன் இராவணன் சிறந்தவன்...!!!! படைத்தலை வன் கொல்லப்பட்டதால் இராவணன் தன் னுடைய தங்கையை பாதுகாக்க கரன் எனும் படைத்தலைவனை விந்தக நாட்டு க்கு அனுப்பி வைத்தான் காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புறுத்தினார். இராமரின் விரு ப்பத்திற்கு இணங்காததால் இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்துக் கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றான் படை த்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம்வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமி ருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கை யில் தன் தங்கையாக போற்றினான்.'' **கம்பன் தமிழனுக்கு செய்த துரோகம்.... **வால்மீகி இராமாயணத்தை அடிப்படை யாக கொண்டு கம்பன் இராமாயணத்தை படைத்தான்ஆனால் உண்மைகளை ஏன் மறைத்தான்... * * * இராம பக்தர்களே,தயவு செய்து கம்பராமாயணத்தையும்,வால்மீகி இராமாயணத் தை யும் ஒரு முறை ஒப்பிட்டு படித்துப் பாருங்கள்.அப்போது தெரி யும் கம்பன் என்ன எழுதினான்,வால்மீகி என்ன எழுதினான் என்பதை.இங்கே சொல்வது கற்பனை அல்ல.அதனால் தான் ஆதாரங்களையும் படித்துப் பாருங்கள். இராவணன் தங்கை சூர்ப்பனகை பொழுது போக்க செல்கிறாள்.அங்கே இராமனை காணுகிறாள்.அவனை காதலிக்கிறாள்…..இப்படி இராமாயணம் கூறிக் கொண்டு வந்து, தகாத முறையில் நடக்க முற்பட்டதால் தம்பி இலக்குவன் கொடிய தண்டனை கொடுக்கிறான்,என்று தொடருகிறது இராமாயணம். கடவுள் அவதாரம், ஒரு பெண்ணு க்கு கொடுக்கும் தண்டனையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த கொடூர சம்பவத்தை இராவணனு க்கு அவன் தங்கை தெரிவிக்கிறாள். கோபம் கொண்ட இராவ ணன் சீதையை சிறை பிடிக்கிறான். அது இராவணனின் தண்ட னையே தவிர, இராமனுக்கு உணர்த்துவதற்காகவே தவிர சீதை மேல் காதல் கொண்டல்ல. இவைகள் திரிவு படுத்தப்படுகின் றன. அனுமன் சீதயை இலங்கையில் சந்தித்த போது, உங்கள் கவலையால் இராமன் மது மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க் கம் 37 குறிப்பிடுகிறது. ஆனால் இதை சோ அவ்ர்கள் குறிப்பிடும் போது, இராமன் மதுவல்ல தேனை அருந்தினார் என வக்கால த்து வாங்குகிறார். ஆனால் மாமிசம் பற்றி மறந்து விடுகிறார். மது விலக்கை தேன் விலக்கு என்று குறிப்பிடலாமா? இந்த சமயத்தில் இருக்கு வேதத்தில் மதுவையும் மாமிசத்தையும் பயன்படுத்தியதை எழுதி வைத்திருக்கிறதே. தமிழர்களுடன் போர் நடத்தியதையும்,தமிழர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி யாகங்கள் நடத்தியதையும் குறிப்பிடுகிறதே, அஸ்வமேத யாகம் சொல்லப்படுகிறதே ஏன் மறைக்கிறார்கள்? நோக்கம் மூட நம்பிக்கை, சாதி ,இவற்றை தமிழர்களிடம் பர ப்பி, அவர்கள் கல்வியை அழிப்பதும்,கல்வி கற்காது தடை செய்வதும் தான். வால்மீகி ராமாயணப்படி, ராமன், லட்சும ணன், சத்துருகன்களே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள் தெரியு மா? குழந்தை இல்லாத தசரதன், 3 யாகப் பார்ப்பனர்களை அழைத்து தனது மனைவியை, அந்த 3 புரோகிதப் பார்ப்பனர்க ளிடம் ஒப்படைத்து தனது மனைவியிடம், நீ என்னைப் போல வே இவர்களையும் பாவி என்று கூறுவதாக வால்மீகி ராமா யணம் கூறுகிறது. அப்படிப் பிறந்தவர்கள்தான் ராமன் உட்பட நான்கு சகோதரர்கள். வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண் டத்தில் இது குறிப்பிடப்படுகிறது. ஆனால், கம்பன், இதை எல் லாம் மறைத்து விட்டான். ‘சம்பூகன்’ என்ற சூத்திரன் – பார்ப்பன ருக்குரிய தவத்தை செய்ததாலேயே – பார்ப்பன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று, ராமன் சம்பூகனைக் கொன்றான். இவற் றைச் சொல்ல விரும்பாத கம்பன்,உத்தர காண்டத்தை எழுதா மலேயே விட்டு விட்டான். ***இராமன் ஏகபத்தினி விரதனா? இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்ப ழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத் தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். இது அவரின் கருத்தல்ல,மொழிபெயர்ப்பு கடவுள் இராமன் சொன்னான், பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. இதுவும் வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100 சொல்கிறது. கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார், வால்மீகி இராமாயணத்தை ஆதாரம் காட்டி Dr.அக்னி ஹோத் ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.ஆறு வயதில் அவளும் நோக்கி னாள்,அவனும் நோக்கினாள் இது கம்பன் தந்தது இவற்றை மறைக்க ஆரியத்திற்கு துணை போய், வால்மீகி இராமாயண த்தை கம்பர் மாற்றி எழுதியது ஏன்? .......காட்டில் இருந்து மீண் டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்ற மும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷே கம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை[லவ, குச ] சும ந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என் பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. "தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவ ரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன?"... ...சீதை "லட்சுமணா! நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என் னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என் னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல்" என்று கோபத்தோடு சொன்னாள். ...லட்சுமனன் தேர் மறைந்தது கண்டு,சீதை கதறினாள்.மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்... ...லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர்.சீதாதேவியை அன்புத்தாயை வரச்சொல்வீர்களா? என்றனர். உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர்............................ .......................சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர். இப்ப ராமர் பரதனுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள் Ayodhya kandam, Chapter 100/verse 49 "Women should not be trusted" and that "Secrets should not be confided to the wife" ***தமிழர்களிடம் இவை எடுபடாது என்பதால் உண்மைகளை மாற்றி எழுதினார். இப்படி தமிழர்களின் வரலாறுகளை மறைத்து,தங்கள் போலிகளை புகுத்தி நம்மை போதையில் வைத்திருக்க முடிவு செய்தது ஆரியம். நாம் அதைக் கண்டு கொள்ளாது தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கிறோம். கடலில் நம் நிலம் இருக்கிறது,20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லி பெருமை பேசிக் கொண்டால் போதுமா? நம் வரலாறுகளை மறைத்து ஏமாற்றுவதை இனம் காண வேண்டாமா? உண்மைகளை தெரிந்து கொண்டு இனியும் ஏமாறாமல் இருக்க வேண்டாமா? பல வரலாறுகள் வட நாட்டவர்களால்,மத்திய அரசால்,ஆரியர்களால் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு விட்டதற்குக் காரணம், 20 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட தமிழனின் நாகரீகம் தெரிந்து விடுமானால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களின் உண்மைகள் தெரிந்து விடும் என்ற அச்சம் தான். அதனால் தான் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டும் கூட, கடலில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர் நாகரீக சிதைவுகளை வெளிக் கொணர மத்திய அரசு முன்வரவில்லை.தொல்பொருள் ஆய்வுகளைக் கூட தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள்,நம் நாட்டு நடுநிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய, ஒப்படைக்க அல்லது அவர்கள் சுயாதீனமாக ஆய்வுகள் நடத்த ஏன் அனுமதிக்க மறுக்கிறது? சிந்தியுங்கள்...... பகிர்ந்து கொள்ளவும்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...