பின் தொடர்பவர்கள்

0350 கருகிய ரொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0350 கருகிய ரொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மார்ச், 2016

0350 கருகிய ரொட்டி

கருகிய ரொட்டி

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்ப வத்தை ஒரு கதையாக த்ருகின்றேன்.இதோ... அப்துல் கலாமின் வார்த்தை களில் , அவரது இளமைக்கால வாழ் க்கை :"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்... என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்... சமை த்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தை க்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட் டார். நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவி ல்லை  .. என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...ஆனால் அதற்கு என் தந்தை யோ .." எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....சாப் பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந் தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரி டம் தயக்கத்துடன் கேட்டேன் :" அப்பா ... உங்களுக்கு உண்மை யாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?" சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணை த்துக் கொண்டு சொன்னார்...." மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கி றார் ..களைத்துப் போய் இருப்பார் ... ஒரு கருகிய ரொட்டி யாரை யும் காயப்படுத்தப் போவதில்லை ... ஆனால் கடும் வார்த்தை கள் கண்டிப்பாக காயப்படுத்தும்...நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...இவ்வளவு வருடங் களில் நான் கற்றுக்கொண்டது ....நடப்பது எதுவாக இருந்தா லும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , எனக்கு அளவில்லாத மரி யாதை எழுந்தது...அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...ஆம்..“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”வீட்டில் சாப்பிடும் போது இதனை நினவில் கொள்வோம் அன்புடன் பேசாலைதா நோர்வே.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...