பின் தொடர்பவர்கள்

0335 குருவும் குதிரைக்காரனும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0335 குருவும் குதிரைக்காரனும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

0335 குருவும் குதிரைக்காரனும்!

குருவும், குதிரைக்காரனும்!


குருவும், குதிரைக்காரனும்!ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு இடத்தில் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.
அவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரன் சென்றிருந்தான். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை."என்னப்பா பண்ணலாம்?"னு கேட்டார்."அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்"னான்.செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு "சபாஷ்" போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப் பிரமாதப் படுத்திட்டார் குரு.பிரசங்கம் முடிந்தது. "எப்படிப்பா இருந்தது என் பேச்சு?"னு அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு."அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!"னான்.அவ்வளவுதான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது குருவிற்கு!!

நீதி : மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்வது நம்மைத்தான் முட்டாளாக்கும் !!!  அன்புடன் பேசாலைதஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...