பின் தொடர்பவர்கள்

0383 மனித சுபாவத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0383 மனித சுபாவத்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0383 மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

                                         
மசூதியில் பலர் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த னர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டி ருந்த ஒருவர், திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டி ருந்தவரைப் பார்த்து "அடடா, நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்துவிட்டேன்" என்றார். "தொழுகை நேரத்தில் நீ பேசியதால் என் பிரார்த்தனையைக் கலைத்துவிட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்யவேண்டும்" என்றார் இரண்டாமவர்.
                                                                    "நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக்கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்யவேண்டும்" என்றார், வீட்டை பூட்ட மறந்துவந்தவர். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்" என அந்த இருவரும் கேட்டனர். "பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரா ர்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்து கிறான்" என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.  கோவிலுக்கு ஒழுங்காக செல்பவ ர்கள் முதலில் நினைப்பதுண்டு தாங்கள் கடவுளுக்கு மிக நெருக்க மானவர்கள் என்று, இவர்கள் தங்களை தாங்களே அறிந்து கொள்ளா மல் சொல்லும் வார்த்தைகளும், செயல்பாடுகளுக்கும் மற்றவர்க ளை கடவுளுக்கு அருகாமையில் வருவதை தடை செய்கின்றார்கள். தேர் ஏது சிலை ஏது? மனிதரெல்லாம் தெய்வங்களாய்மாறும் போது,,,,,, மாறுவோம் மாற்றுவோம் அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...