எலிகள்கூட பணத்திற்கு துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன
அன்பர்களே பணத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இல்லை. ஏனெனில் காசு கடவுளின் தம்பியாகிற்றே! அண்ணனை விட தம்பிகள் சிலவேளைகளில் ஆற்றல் பெற்றவர்களாகிவிடுவதும், மனிதர்கள் மட்டுமல்ல மிரு கங்கள் கூட பணத்தின் மீது ஆசை கொள்கின்றது, சம்பகா என்கின்ற நகரத்தில் சுத்திர கர்ணா என்ற துறவி வாழ்ந்து வந்தார். அவருடைய பிச்சைப் பாத்திரத்தில் மீதம் வைத்த உணவை அவருடைய வீட்டில் இருந்த எலி துள்ளித் துள்ளிக் குதித்துவிட்டு உண்ணும். அவர் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது அந்த எலி அவரது கட்டிலுக்கு அருகில் வந்து குதிக்காமல் இருப்பதற்காக அடிக்கடி ஒரு பிரம்பால் தரையைத் தட்டிக்கொண்டே இருப் பார். ஒருநாள் அவருடைய நண்பர் வினாகர்ணா, அந்தத் துறவி யின் வீட்டுக்கு வந்தபோது அவரிடம், நீங்கள் என்னோடு பேசா மல், ஏன் தரையைத் தட்டிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சுத்திரகர்ணா, தவறாக நினைக்காதீர்கள். இந்த எலி நான் மீதம் வைப்பதைச் சாப்பிட்டுவிட்டு என் முன் னேயே துள்ளித் துள்ளிக் குதிக்கிறது. நாம் பேசுவதை தடை செய்கிறது என்று சொன்னார். வினகர்ணா அந்த எலி குதித்த இடத்தை உற்று நோக்கினார். பிறகு அது குதிப்பதையும் பார்த் துவிட்டு அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். தோண்டிய போது அந்த இடத்தில் ஒரு புதையல் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். தரைக்கு அடியில் புதையல் இருந்ததாலும், அந்த இடத்திற்குப் பக்கத்தில் பொந்து தோண்டி வாழ்ந்ததாலும்தான் அந்த இடத்திற்கு வந்ததும் எலி துள்ளித் துள்ளிக் குதித்தது என்று விளக்கம் சொன்னார் வினகர்ணா. எலிகள்கூட பணத்திற்குமேல் படுத்திருந்தால் தங்கள் நிலையை மறந்து துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுகின்றன. பதுக்கிவைத்த பணத்தை எலிகள் கொரித்துவிடுகின்ற சம்பவங்கள், கிராமத்து பண்ணையாளர்கள், சம்மாட்டிமார்களுக்கு உண்டு. அன்புடன் பேசாலைதாஸ்