நான் கழுதையாக மாறிவிட்டேன்! பேசாலைதாஸ்
அன்பர்களே உண்மை, சத்தியம் இவை எப்பொழுதும் மறைந்தே இருக்கும். வெளிப்படையாக அது தெரிவதில்லை, நாம் தான் முயற்ச்சி செய்து அதை கண்டு கொள்ளவேண்டும். வெளிப்படை யாக ஒரு உண்மை தெரிந்துவிட்டால் அது விஞ்ஞான உண்மையாகிவிடுகிறது, தெளிவாக தெரியாதவரை அது சித்தா ந்தமாகின்றது. சித்தாந்தங்களின் தத்துb வமே அதுதான். இது எல்லா சமயங்க ளுக்கும் பொருந்தும் என்பது என் சிறுமதி. எதையுமே விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்க்கும் கிறிஸ்தவம் கூட, திருமறை என்றே அழைக்கப்படுகின்றது. சத்தியத்தையும், உண்மையையும் நீங்கள் தீர விசாரித்து, அறிந்து கொள்ள முற்படுகின்றீர்களா? நீங்கள் அதன்வழியே போய்த்தான், சத்தியத்தையும், உண்மையையும் கண்டுகொள்ள வேண்டும், ஒருமுறை நஸ்ரூதீன் முல்லா, தான் வளர்த்துவந்த கழுb தையை தொலைத்துவிட்டார். ஊரெல்லாம் தேடினார். அவரது பரிதாப னிலைகண்டு, ஊர்மக்களும் அவரோடு தேடினார்கள், பயனில்லை. அது புனிதமாதம், எனவே வெளியூர் பக்கதர்கள் கூட்டத்தோடு, இந்த கழுதையும் சென்றிருக்கவேண்டும், என ஊர்மக்கள் முடிவுசெய்தனர். முல்லாவுக்கோ கவலை பெரிதாகியது, ஏதோ நினைத்தவர், சட்டென்று, தரையில் குனிந்தார், மிருகங்கள் போல கால்களாளும், கைகளாலும், கண்களை மூடிக்கொண்டு, ஊர்ந்து திரிந்தார், தன் தோட்டத்தில் அவர் முதலில், ஊர்ந்து திரிந்தார், ஒரு இடத்தில் கண்திறந்து பார்த்தார், அங்கே ஒரு பள்ளத்தில் அவரது கழுதை விழுந்துகிடந்ததை கண்டார். ஊர் மக்களுக்கு ஒரே ஆச்சரியம், எப்படி உங்களால் கண்டு பிடிக்க முடிந்தது? என முல்லாவிடம் கேட்க, அவரோ மிக எளிதாக், கழுதையை தேடவேண்டுமானல், கழுதை போல நாமும், மாறவேண்டும். நான் கழுதையாக எண்ணை மாற்றினேன், கண்டு கொண்டேன் என்றார். இதில் பெரிய உண்மை இருக்கின்றது அன்பர்களே! நாம் யாரோடு பழகினாலும், அவர்களது உண்மையான நிலையை, கண்டு பழகb வேண்டும். உண்மையை கண்டு கொள்ள, நாம் அதன் வழியே செல்லவேண்டும் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்