பின் தொடர்பவர்கள்

0570 பொய்யன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0570 பொய்யன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 பிப்ரவரி, 2019

0570 பொய்யன்

மிகச் சிறந்த பொய்யன்        பேசாலைதாஸ்

                                   
                              பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர்கள் தான், நாம் எல்லோரும்! இந்த உடல் பொய், என்றோ ஒரு நாள், அழிந்து போகும், அதனால்தான், தாயாலே வந்தது, தீயாலே போவது, மெய்யென்று மேனியை யார் சொன்னது? யேசு கிறிஸ்து ஒருவரே மேனியை மெய்யெ ன்று சொன்னவர், அவர் ஒருவரே, இற ந்தார், மரணத்தை வென்றார், இதோ சதாகால மும் உயிரோடு இருக்கின்றேன், என்றார். இந்த மாபெரும் உண்மையை அறியாமல் பொய்யாக வாழும் நாம்,  நம்மை விட சிறந்த பொய்யர்கள் யாரும் உண்டோ என்பதை பரிட்சித்துப்பார் க்க மனித மனம் சிலவேளை ஆசைப்படுவதுண்டு, அப்படி ஒரு ஆசை ஒரு நாள் ஒரு அரசனுக்கு வந்தது.

                                                      அந்த‌ அரசன் நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப் படும் என்று அறிவித்தார் நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவி ல்லை ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான் அரை குறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்

                                                                                                அந்த ஏழை சொன்னான் ''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா..??? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன் ''அரசனுக்கு கோபம் வந்து விட்டது ''நீ பொய் சொல் கிறாய் நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது..???' என்று கத்தினான். 

                                                                                 உடனே ஏழை சொன்னான் "அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்நான் சரியான பொய் சொன்னேன் என்று, எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள் ''அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான் உடனே சொன்னான்

                                                                                                   ''இல்லை, இல்லை. நீ பொய் சொல்லவில்லை'' என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான். நல் லது அரசே நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால் என க்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள், ''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசு களை வழ ங்கினான்அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...