அபசகுன முகம்
இந்த விஷயம் பீர்பாலுக்கு தெரிய வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.
அதற்கு அக்பர் இவனுடைய முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது, இவனு டைய முகம் அபசகுனமானது என்று கூறினார்.
அதற்கு பீர்பால் பயங்கரமாக சிரித்தார். "ஏன் சிரிக் கிறாய்?" என்று அக்பர் கோபமாக பீர்பாலை பார்த்து கேட்டார். அதற்கு பீர்பால் "நீங்கள் அவனுடைய முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முக த்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகி றதே , அப்போ யாருடைய முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்" என்றார். அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த சிப்பாயை விடுதலை செய்தார்.