பின் தொடர்பவர்கள்

0134 பேரானந்தம் எது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0134 பேரானந்தம் எது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0134 பேரானந்தம் எது?

மகா விஷ்ணுவின் பரம பக்தரான நாரதர் ஒரு சமயம் பெரும் துக்கத்தால் பீடிக்கப்பட்டார்,  எவ்வளவோ முயன்றும் அந்த துக்கத்தில் இரு ந்து மீள முடியாமல் மகாவிஷ்ணுவை சரணடை ந்தார் விஷ்ணு, நாரதரிடம் " உன் துயர் நீங்க புனித யாத்திரை செய் " என்று அறிவுரை கூறி னார். அவ்வாறே நாரதர் செல்லும் வழியில் கங் கையில் நீராடிய போது, ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. "என்ன மீனே? நலமா?" எனக்கேட்ட நார தரிடம், அம்மீன் சோகமாக " என் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன் " என்றது. அதை கேட்ட நாரதர் ," என்ன மீனே உளறுகிறாய்? முட்டாள் மீனே ! தண்ணீரில் இருந்து கொண்டு தாகத்தால் துன்புறுகிறாயா?" என்றார். "ஆனந்த அமிர்தவடிவான பகவானின் அருகிலேயே இருந்துகொண்டு தாங்கள் துன்ப படுவதை விட இது ஒன்றும் வியப்பில்லையே!" என்று பதிலளித்தது மீன். பகவானை மறந்ததே துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்று நாரதர் உணர்ந்த மறு கணம், அம்மீன் மகாவிஷ்ணுவாக காட்சி அளித்தது.
"இறைவனை மறப்பதே மனிதரின் துன்பங்களுக்கு எல்லாம் மூல காரணம்" அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...