பின் தொடர்பவர்கள்

0032 விழியே நீ கொண்ட ஒளி நானே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0032 விழியே நீ கொண்ட ஒளி நானே! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மார்ச், 2021

0032 விழியே நீ கொண்ட ஒளி நானே!


விழியே நீ கொண்ட ஒளி நானே!   பேசாலைதாஸ் 

(முக நூலில் வெளிவந்த ஒரு நிகழ்வு கதையாகின்றது!)

                   

எதோ ஒரு கோபத்தில் லதா உரக்க கத்தினாள் ! என்னங்க...!! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும்....!!

யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க".....!!

என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி...!!

நீ ஏன் டென்சனாகுறே....!!

எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்.....!!

சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க.....!!

மறுநாள் காலை.....!!

அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!!

" எங்கேடா மகேஷ்.....??? "

" உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா...!!

அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.....!!

உன்னை போல நிறைய பேர் இருப்பாங்க....!!

அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா......!

மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்......!!

உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு....!!

உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது...!!

எல்லா கஷ்டமும் தீர்ந்து,

இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா.....!!

என் கடைசி காலத்தை இங்கேயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...!! "

உன்னை இப்போ விளக்கம்லாம் கேக்கல நான்....!!

உயிரை வாங்காமல் கிளம்பு...

"என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல,

கலங்கி போய் நின்றாள் மரகதம்....!

இரண்டு மாதங்கள் உருண்டோடின...!!

மகேசும் லதாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்...!!

எதிரே வந்த லாரி மோதியதில்,

இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்...!!

லதாவிற்கு பலத்த அடிபட்டு 'கிருஷ்ணா மருத்துவமனையில்', அனுமதிக்கப்பட்டாள்....!

டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்... "

Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்.....!

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல...!!

ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள்,

அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு.....!!

அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை.....!!

அய்யோ....!! டாக்டர் லதாவுக்கு,

கண் பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா....? "

ஒரு வழியிருக்கு.....!!

இறந்தவங்க யாரோட கண்ணையாவது,

அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு.....!!

நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம்....!!

நீங்களும் உங்க சைடுல ட்ரை பண்ணுங்க.....!!

என்று சொல்லி நடந்த டாக்டரை ,

கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது.....!

தாய் மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர...

'நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற ,

பேரனை பார்க்கணும்,

பேசனும்னு ,

உயிர வாங்குது...!!

சே....!!சனியன்....!!

கை கழுவி விட்டாலும்,

நம்மள விடாது போல'...

என்று முணு முணுத்துக் கொண்டே ,

மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான் மகேஷ்.....!

ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து.....!!

மகேஷ் யூ ஆர் சோ லக்கி...!!

உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி...!!

இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்.....!

நீங்க நர்ஸ் கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க....!!

ரொம்ப நன்றி டாக்டர்.....!!

ரொம்ப நன்றி "

டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்....!

மூன்று மணிநேரம் கழித்து,

ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்....!!

" டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க "....!!

ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்.....!!

இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்......!!

அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும்...!!

அதுக்கப்புறம் நீங்க போய் அவங்களை பாருங்க.....!!

லதா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்.....!!

"லதா உனக்கு ஒண்ணுமில்ல..!!

நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க....!!

ம்ம்ம்....!!

நாம அத்தையை தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ,

இப்படி நடந்துடுச்சி.....!!

திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க....!!

நம்ம கூடவே வச்சுக்கலாம்....!!

நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது ,

அவங்க முகமாத்தான் இருக்கணும்...!

சரி லதா...!

காலையிலே அம்மா போன் பண்ணங்க.....!!

சன்டே நான் அவங்களை பார்க்க போகும் போதே,

பேரக்குழந்தையை பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க....!!

அதுக்குதான் போன் பண்ணி தொல்லை கொடுக்கறாங்கனு,

நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்....!!

இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி,

கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் லதா....!!

மகேஷ் ஹோம்க்கு போன் பண்ணி,

" ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன்....!!

அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......!!!

என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே.....!!

படிச்சவங்க தானே நீங்க...!

காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி.....!!

கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க.....!!

உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு,

சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க.....!!

அவங்க மரணத்தோட போராடி உயிரை விட்டாங்க.....!!

அவங்க கடைசி ஆசையை கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ......!!

அப்புறம் ஒரு விசயம்,

எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா ,

அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்.....!!

உங்களுக்கு போன் பண்ணினோம் நீங்க எடுக்கலை....!!

அதனால நாங்களா முடிவு பண்ணி,

'கண்ணை தானமா' கொடுத்துட்டோம்.....!!!

உங்க அம்மா உயிரோட இருக்கும் போது,

உங்களை பார்க்க ஆசைப்பட்டாங்க.....!!

அவங்க கண் 'கிருஷ்ணா ஆஸ்பிட்டல்ல'....,

ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க....!!

ஒரு வாரம் கழிச்சி ,

"அவங்க கண்ணையாவது "

போய் பாருங்க......!!

அவங்க ,

"ஆத்மா நிம்மதியாகும்" ......!!

போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு,

அம்மாஆ.......என்று அழுதபடியே ஓடி,

மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன்.....

அதிர்ந்தான்.....!!

அவள் மனைவி லதாவிற்கு கண்தானம் கொடுத்தவர்

என்னும் அறிக்கையில்,, "மரகதம் என்றிருந்தது" ....!!!

உயிர் போவதற்கு முன் தன் மகனையும், பாசமான பேரனையும் பார்க்க துடித்த,

அந்த தாயின் ஆசை,

உள்ளார்ந்த பாசம்,

இறைவனின் இதயத்தையும் இளகச் செய்ததோ....??

இறந்து போன அந்த பாசத் தாய் மரகதம்,

இனி தன் ஆசை தீர மகிழ்வோடு தன் பேரனையும், மகனையும் பார்ப்பாள்....!!

"லதாவின் கண்கள் மூலம்"

இறந்த பின்பும் நம்மை வாழ வைப்பது ,

நம் அன்னை மட்டுமே....!!!

உதிரத்தை பாலாக கொடுத்தவள் தாய்...!!

நாம் நலமாக வாழ, நமக்காக வாழ்நாள் முழுவதும் தவிக்கும் ,

ஒரே தெய்வம்...."..தாய்"

அவளை ஒருபோதும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்...!!

"இரும்பு இதயங்கள் இளகட்டும்" ,.....!!

அன்புடன் பேசாலைதாஸ் 

 

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...