பின் தொடர்பவர்கள்

0568 அப்பா அப்படியேதான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0568 அப்பா அப்படியேதான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

0568 அப்பா அப்படியேதான்

என் அப்பா இன்னும் அப்படியேதான்,,,,,,,!பேசாலைதாஸ்

                               நான் மருத்துவ கல்லூரிக்கு காலடி எடுத்தவைத்த காலம் முதல், என் எல்லாச்செலவுகளுக்கும் அப்பாதான் பணம் அனுப்பிவைப்பார், ஒவ்வொரு மாதமும் பதினாறாம் திகதி என் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரும், அப்பாவுக்கு பதினைந்தாம் திகதிதான் சம்பள நாள்! கல்லூரி கட்டணம் முதல் வாடகை, மற்றும் சாப்பாடு இதர செலவுக்கு எல்லாவற்றிற்கும் அப்பாவின் பணம்தான், வரவில்லாமல் செலவுகள் செய்து மனம் மகிழ்ந்த காலம் அது! நான் டாக்டராக வந்தபின், அப்பாவை வேலைக்கு அனுப்பாமல் நானே பணம் அனுப்பி, அவரை நல்லபடியாக பார்க்கவேன்டும் என என் மனம் அடிக் கடி சொல்லும், அப்பா பாணம் அனுப்பி அது கிடைத்தபின், அப்பாவுக்கு பணம் கிடைத்தது என்று பதில் சொல்வதற்காக அப்பாவுக்கு போன் எடுக்கும் போதெல்லாமம் என் மனக்கிடைக்கையை அப்பாவுக்கு சொல்ல தவறுவதே இல்லை, ஆனாலும் அப்பாவுக்கு சுயமரியாதை கொஞ்சம் ஜாஸ்தி! பெட்டைப்பிள்ளை உழைத்து அதில் வாழ்வதா? அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை,, நாட்கள் உருண்டன,,,,,

                                                             படிப்புகள் முடிந்து டாக்டராக பணியேற்க சுவீடன் நாட்டு தலைநகர், ஸ்டொக்கோம் வந்துவிட்டேன், புதிய மொழி, புதிய நாடு, கனவு கண்ட‌ வேலை, எல்லாமே எனக்கு வாழ்வில் புது உற்சாகத்தை தந்தன, அன்று சம்பள நாள்! முதல் சம்பளம், மேசையில் ஒரு வங்கி காசோலையாக‌, சம்பளமாக ஐந்து இலட்சம் எழுதப்பட்டிரு ந்தது , உற்சாகம் மேலிட அப்பாவுக்கு போன் எடுத்தேன், அப்பா எனக்கு மாத சம்பளமாக வரி, நீங்கலாக ஐந்து இலட்சம் வந்தது என்று சந்தோசம் மிகுதியில் கத்திக்கொண்டே  "அப்பா இனி உங்களுக்கு நான் தான் பணம் அனுப்புவேன், எவ்வளவு அப்பா பணம் அனுப்ப"  என்று அப்பா விடம் திமிறாக பேசுகின்றேன், அப்பா எதுவும் பேசாமல் அம்மாவிடம் போனைக்கொடுக்கின்றார். மறு முனையில் அம்மா," பாரம்மா அப்பா வுக்கு எப்பவும் ஒரு தலைக்கணம், பிள்ளைகளிடம் பணம் எதிர்பார்க்க கூடாது என்ற வைராக்கியம் அவருக்கு" என்று அம்மாவிடம் பொறிந்து தள்ளுகின்றேன்,  " என்னம்மா செய்கிறது அப்பாவின் குணம் உனக்கு தெரியும்தானே" அம்மாவின் சமாதன வார்த்தையில் என் மனம் குழைந்துவிட்டது. 


                                                                    வேலையில் சேர்ந்த எனக்கு கார் ஒன்று வாங்கவேண்டும் என்ற ஆசை, எனது ஆசையை பிரான்ஸிலிருக்கும் எனது பெரியப்பா எட்வேட் எப்படியோ தெரிந்து கொண்டார். பிரான் ஸில் கார் வாங்கினால் மலிவாக தரமான கார் வாங்கலாம் எனது வங்கியில் கடனாக பணம் எடுத்து கார் வாங்கிதரலாம், கொஞ்சம் முற்பணம் இருந்தால் போதும் என்றார், நான்கு மாதம் சென்ற பின், பிரான்ஸ் போவதற்காக எனது வங்கி கணக்கை மீளாய்வு செய்கின் றேன், நான் எதிர்பார்த்த தொகையைவிட அதிகமாகவே பணம் வைப்பில் இருந்தது, ஆச்சரியத்தில் வங்கி கணக்கை சரி பார்க்கி ன்றேன், வழமைபோல எனது அப்பா ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் அனுப்பி இருந்தார், இந்த மாதமும் அதுபோலவே,,,,,,,கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன். என் அப்பா மாறவேயில்லை என் மகள் வான்மதிக்காக ,,,,, பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...