பின் தொடர்பவர்கள்

0002 சிந்திக்கும் மன்னார் கழுதை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0002 சிந்திக்கும் மன்னார் கழுதை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 ஜனவரி, 2021

0002 சிந்திக்கும் மன்னார் கழுதை!

   சிந்திக்கும் மன்னார் கழுதை! (பேசாலைதாஸ்) ரனிலின் நல்லாட்சியின் போது கதையாசிரியனுக்குள் எழுந்த சிந்தனை இது!

                                           நல்லாட்சி என்ற போர்வை யில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்து டன் தேனிலவு நடத்தி அந்த அரசாங்கத்தை பல தடவை காப்பாற்றியுள்ளது, இருந்தும் தமிழர் களின் பிரச்சனையும் வாழ்க்கை சுமையும் குறைந்தபாடில்லை, ஆனால் முஸ்லிம் ஆட்சியா ளர்கள் அரசாங்கத்துடன் ஒட்டி, தங்களது சலு கையையும் உரிமைகளையும் பெற்று செழித் தோங்கி வளர்கின்றார்கள். 

                                                  கூட்டணி கால்களில் விழ்வதைவிட நேரடியாக அரசாங்கத்துக்கு வால் பிடித்தால் சலுகையும் கிடைக்கும், கூடவே அபி விருத்தியும் கிடைக்கும் நாம் பலம்பெருவோம் அதைக்கொண்டு நம்து அரசியல் உரிமைகளை பேரம் பேசலாம் என்ற கழுதைக்கு உள்ள புத்தி கூட நமக்கு இல்லையே! வணிகர் ஒருவர் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும்போது எதிரிகள் வருவதைப் பார்த்தார். பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகி றார்கள்” என்றார். கழுதையோ, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ”ஏன் வரமறுக்கிறாய்?” என்று கேட்டார் வணிகர். ”எதிரிகளுக்கும் பொதி சுமக் கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போ கிறாதா?” என்றது கழுதை. 

                                           ஏமாற்றப்படும் சிறுபாண்மை மக்களின் நிலையும் இதுதான்! இலங்கையில் ஆட்சி மாறி ஆட்சியாளர்கள் வரலாம் ஆனால் உண்மையாக சிறுபாண்மை மக்கள் மீதுள்ள அரசியல் பிரச்சினைகளு க்கு, சுமைகளுக்கு இதய சுத்தியோடு செயல்படுவார்களா? என்பது நமக்கு முன் உள்ள பெரும் கேள்வி? ஆட்சியாளர்களுக்கு துணைபோவ தினால் மட்டும் சுமை குறைந்து விடுமா? சிறப்பாக மன்னார் மக்களுக்கு சாலப் பொருந்தும் ஏனெனில் அங்குதான் நிறைய கழுதைகள் உண்டு. அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...