பின் தொடர்பவர்கள்

0480 லாசர் சிரிக்கின்றான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0480 லாசர் சிரிக்கின்றான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜனவரி, 2018

0480 லாசர் விழுந்து விழுந்து சிரிக்கின்றான்

லாசர் விழுந்து விழுந்து சிரிக்கின்றான்
அன்பர்களே வேதாகமத்திலே இரண்டு லாசர் இருக்கின்றனர், ஒன்று மரித்து இயேசுவால் உயிர் பெற்றவன் மற்றது சொர்க்கத்துக்குப்போன ஏழை லாசர். நான் இங்கு அந்த லாசரை பற்றி கொஞ்சம் சொல்லப்போகின்றேன். இயேசு சொன்ன உவமையிலே, பணக்காரன் நேரடியாக நரகத்துக்குச் சென்றான். லாசரஸோ சொர்க்கத்திற்குப் போனான். அந்தப் பணக்காரன் உயரத்தில் லாசரஸ் இருப்பதைப் பார்த்து கடுப்படைந்தான். லாசரஸோ கடவுளின் அருகில் அமர்ந்திருந்தான். உயரத்தில் வீற்றிருந்த கடவுளைப் பார்த்து, "தேவனே, ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நான் அங்கே இருக்க வேண்டும். லாசரஸ்தான் இங்கே இருக்க வேண்டும்" என்று கூவினான். தேவனோ சிரித்தபடி, "யார் பூமியில் கடைக்கோடியில் இருந்தாரோ அவர் இங்கே முதலிடத்தில் இருப்பார். நீயோ பூமியில் எல்லாவற்றையும் முதன்மையாக இருந்து அனுபவித்துவிட்டாய். லாசரஸும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே" என்றார்.அந்தப் பணக்காரனால் நரகத்தின் வெம்மையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நரகத்தில் யாரும் குளிர்சாதன வசதியை இதுவரை செய்யவும் இல்லை. அவனுக்குத் தாகமாக இருந்தது. "தேவனே, கொஞ்சம் தண்ணீரையாவது லாசரஸிடம் இங்கே கொண்டுவரச் சொல்லி அனுப்புங்கள். நான் தாகித்திருக்கிறேன்" . கடவுள் பதிலளித்தார்."லாசரஸ் பல முறைகள் தாகித்திருந்தான். உனது வாசலுக்கு அருகேயே பசியால் இறந்து போகும் நிலையில் இருந்திருக்கிறான். உன் வீட்டிலோ விருந்துகள் நடந்தபடி இருக்கும். ஆனால் ஒருநாள்கூட அவனுக்கு நீ உணவளித்ததில்லை.                                            அவன் தொடர்ந்து துரத்தப்பட்டிருக்கிறான். ஏனெனில் உன் வீட்டுக்கு வரும் விருந்தினர்களோ அரசியல்வாதிகளாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும், சீமான்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தனர். அவர்களால் ஒரு யாசகனின் இருப்பைச் சகித்துக்கொள்ள முடியாதென்பதால் அவன் விரட்டப்பட்டான். அவனை ஒருநாள் கூட இரக்கத்துடன் நீ பார்த்ததேயில்லை. அதனால் உன் கோரிக்கை நிறைவேறாது " என்றார் கடவுள். தேவனின் அருகில் அமர்ந்திருந்த லாசரஸ் விழுந்து விழுந்து சிரிக்கதொடங்கினான்.லாசரஸ் ஏன் சிரித்தான்? ஒரு பிச்சைக்காரனாக‌, சொர்க்கத்துக்குள் நுழைய முடியும் என்ற சாத்தியத்தை அவன், தனது வாழ்நாளில் அறிந்ததேயில்லை. அவனுக்கு சொர்க்கத்தில் கிடைத்த மரியாதையைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஏனெனில் அவன் சொர்க்கத்தைபற்றி கேள்விப்பட்டதில்லை. ஒரு பணக்காரன் ஏன் நரகத்துக்குப் போகவேண்டும்? என்ற கேள்வியும் அவனுக்கு இருந்தது. லாசரஸ் இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறான். நீங்கள் இறக்கும்போதும் அவன் சிரிப்பான்:  இப்போது நீங்கள் ஒரு அரசியல் பிரமுகராக இருந்தாலும் சிரிப்பான். அகந்தை கொண்ட பணக்காரனாக இருந்தாலும் லாசர் சிரிப்பான், ஏனெனில் நீங்கள் நரகத்துக்குத் தூக்கியெறியப்படுவீர்கள்.இந்த உலகில் மதிக்கப்படுபவை அனைத்தும் அகந்தையுடன் தொடர்பு கொண்டது. மேலுலகிலோ, எந்த மதிப்பும் அகந்தையின்மையுடனேயே தொடர்பு கொண்டிருக்கிறது. அதனால்தான் புத்தர் ‘அநத்தா’வை அதாவது . ‘நானற்ற’ தன்மை அது. அதனை அவர் வலியுறுத்துகிறார்‘நான் ஒரு ஆன்மா’ என்றுகூட கருதவேண்டியதில்லை. ஏனெனில் அதிலும் கொஞ்சூண்டு அகந்தை உள்ளது. நான் என்பதே மிகச் சிக்கலானது. அது உங்களை ஏமாற்றக் கூடியது. அது பல உயிர்களை ஏற்கனவே ஏமாற்றியிருக்கிறது. ‘நான் இல்லை’ என்று சொல்லிப் பாருங்கள். அந்த காலியான தன்மையில் இருக்கப் பாருங்கள். சுயத்திலிருந்து காலியாகுங்கள். ஒருவர் தனது சுயத்திலிருந்து விடுபட்டாக வேண்டும். சுயம் தூக்கியெறியப்பட்டு விட்டால், எதற்கும் பற்றாக்குறை இல்லை. நீங்கள் நிறையவும் மலரவும் தொடங்குவீர்கள். இயேசுவின் போதனையின் மையப்பொருள் நீங்கள் விண்ணக அரசுக்கு வரவேண்டும் என்பதே அதற்கு உங்கள் நான் என்ற அகந்தையை விட்டொழியுங்கள்  அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...