பின் தொடர்பவர்கள்

0192 அறியாமை குருட்டுத்தன்மை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0192 அறியாமை குருட்டுத்தன்மை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2015

0192 அறியாமை என்னும் குருட்டுத்தன்மை!


அறியாமை என்னும் குருட்டுத்தன்மை!
நாம் நமது அறியாமையால் நம க்கு நாமே கேடுவிளைவித்து விடுகின்றோம்.அறியாமை என்கின்ற குரு ட்டுத்தனம் நமக்குள் நிறையவே இருக்கி ன்றது. அந்த அறியாமை சில வேளைகளில் அழகாக, வன‌ப் பாக, வியப்பாக நம்மை சுற்றி வரலாம். சிலவேளை களில் அது நமக்கு தற்காலிக, போலியான சந்தோச த்தை கொடுப்பதால் நாம் அவற்றில் இருந்து விடுப டத்தய‌ங்குகின்றோம். இறுதியில் அதனா லேயே ஆபத்தையும் அழிவையும் சந்திக்கின்றோம். இரு நண்பர்கள் அதில் ஒருவன் குருடன். இந்த இரு நண்பர்களூமே ஒரு நாள்பா லைவனத்தூடாக பயணம் செய்தார்கள். பாலைவனம் என்பது பகலில் அதிக மான சூடாக இருக்கும் அதேபோல இரவிலே கடுங் குளிராக இருக்கும். இந்த இருவருமே பாலவனத் தில் நெடுந்தூரம் பயணம் செய்ததால் இரவில் ஒரு மண்டபத்தில் அயர்ந்து தூங்கி விட்டார்கள். அதி காலை ஆனதும் குருடனாகிய நண்பன் எழுந்து தட் டுத்தடுமாறி தனது கைத்தடியை தடவி தடவி தேடினான். அந்தவே ளையில் அவர்களூக்கு அருகாமை யில் பாம்பு ஒன்று கடுங்குளிரி னால் விறைத்து தடி போல கிடந்தது. தடவித்தேடிய அந்த குருடருக்கு அந்த பாம்பு கையில் பட்டது. ஆஹா என்னுடைய பழைய தடியை விட இது வழுவழுப்பான தடியாக இருக்கின்றதே என்று நினைத்து கொண்டு, தனது நண்பனை தட்டி எழுப்பினான். விழித்தெழுந்த நண்பனோ, குருட்டு நண்பன் விறைத்த பாம்பை தடியென்று, கை யில் பிடித்துக்கொண்டு இருப்பதைக்கண்டதும், அலறியபடியே நண்பா உனக்கு பைத்தியமா? கையில் தடியென்று எண்ணிகொடிய விஷப்பா ம்பை பிடித்திருக்கின்றாய், அதை தூக்கி எறி என்று கத்தி னான். அதற்கு அவன் நீ பொறமையின் காரணமாக என் அழகிய தடியை பாம்பு என்கின்றாய். என்னிடம் இருந்து அதை அபகரிக்க ப்பார்க்கின்றாய். இனி உன்நட்பு எனக்கு தேவையில்லை என்று சொல்லி, அவனைவிட்டு அகன்று போனான். சறு நேரம் செல்ல செல்ல, சுரிய வெப்பம் அதிகமாக, விறைத்த பாம்பு, உணர்வு பெற்று, குருடனை கொத் தியது. அவனும் அதே இடத்தில் மாண்டான். நம்மில் பலபேர் இப்படித்தான். எடுத்துச்சொன்னாலும் புரி ந்து கொள்ளமாட்டார்கள். பகைத்து,  தாமும் அழிந்து போகின்றார்கள்.     அறிவுறை சொல்பவர் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...