பின் தொடர்பவர்கள்

0544 ஒரு ஓடை நதியாகின்றது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0544 ஒரு ஓடை நதியாகின்றது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மே, 2018

0544 ஒரு ஓடை நதியாகின்றது!

ஒரு ஓடை, நதியாகின்றது!
                                       நம்மில் பலபேர் இப்படித்தான். தான் செய்வது தவறு என்று தெரிந்தும், தவறு களை ஒத்துக்கொண்டு, அதற்கேற் றாற்போல, தவறுக்கான தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வருவதில்லை. அப்படி ஒத்துக்கொ ண்டால்? தன் கெளரவம் என்னா வது? தனது அந்தஸ்த்துக்கு இழு க்கு வருமே  என்று, தன்னை மாற்றி க்கொள்ளாமல், அப்படியே வாழ்கி ன்றார்கள், நீ மாறவேண்டுமா னால், உன்னில் இருக்கும் சில தன்மைகளை இழக்கவேண்டும், அதற்கு நீ இணங்கினால், ஓடையாக இருக்கும் நீ, பெருக்கெடுத்து ஓடும் நதியாக மாறுவாய்!

                                                                              காடு மலைகளைத் தாண்டி பெருக்கெ டுத்து ஓடிக்கொண்டிருந்தது ஓடை ஒன்று. ஒரு கட்டத்தில் பரந்து விரிந்த மணற்பரப்பைக் கொண்ட பாலைவனத்துக்கு வந்து சேர்ந்தது. இதுவரை தான் எதிர்கொண்ட மேடுபள்ளங்களை எல்லாம் கடந்துவந்ததுபோலவே பாலைவனத்தையும் கடந்துவிட முயன்றது. ஆனால், மணற்பரப்புக்கு வந்த பிறகு நீர் உறிஞ்சப்பட்டுத் தான் காணாமல்போவதைக் கண்டு அதிர்ந்தது.

                                                              எப்படியாவது பாலைவனத்தைக் கடப்பதே தன்னுடைய இலக்கு என்ப தில் உறுதியாக இருந்தது ஓடை. ஆனால், அதற்கு வழி இல்லையே! அப்போது பாலைவனத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது. “காற்றால் பாலைவனத்தைக் கடக்க முடியும் என்றால், ஓடையாலும் முடியும்” என்று முணுமுணுத்தது அந்தக் குரல்.

                                                             அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஓடை சொன்னது, “நான் மணலில் முட்டிமோத வேண்டியிருப்பதால் அதனால் உள்ளிழுக்கப்படுகிறேன். ஆனால், காற்றுக்கு ஏது வேலி! அது பறந்த படியே பாலையை லேசாகக் கடந்துபோய்விடுகிறது”.

                                                         அப்போது அசரீரி சொன்னது, “நீ பழக்கப்பட்ட வழிமுறையில் எவ்வளவுதான் உருண்டு புரண்டாலும் உன்னால் கடந்து செல்ல முடியாது. உன் முயற்சியால் காணாமல் போவாய். உன்னுடைய இலக்குக்கு அழைத்துச்செல்லக் காற்றை நீ அனுமதிக்க வேண்டும்”.
“ஆனால், இது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டது ஓடை.
“காற்று உன்னை உறிஞ்ச நீ அனுமதிக்க வேண்டும்” என்றது அசரீரி.

                                                                              ஆனால், இந்த யோசனை ஓடைக்கு ஏற்புடையதாக இல்லை. இதுவரை அது உள்ளிழுக்கப்பட்டதே இல்லை. தன்னுடைய அடையாளத்தை இழக்க அது தயாராக இல்லை. அப்படி ஒரு முறை தன்னை இழக்க நேரிட்டால் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்குமா என்னும் சந்தேகம் அதற்கு எழுந்தது.

                                                                மணல் சொன்னது, “இந்தக் காரியத்தைக் காற்று லாகவமாகச் செய்யும். தண்ணீரை அள்ளியெடுத்துப் பாலைக்கு அப்பால் கொண்டுசென்று அது கொட்டிவிடும். இப்படியாக மழையாக மண்ணில் விழுந்து நதியாகப் உயிர் பெறும்.” “இது உண்மை என்று நான் எப்படி நம்புவது?”
                                                          “அது அப்படித்தான். இதை நீ நம்ப மறுத்தால் சேறாக ஆவதைத் தவிர எதுவாகவும் நீ மாற முடியாது. அதற்குக்கூட இன்னும் பல்லாண்டுகள் ஆகும். எப்படியும் ஓடைக்கு நிகராக ஆக முடி யாது.”

“ஆனால், இன்று இருப்பதுபோலவே எப்போதுமே இருந்திட முடியாதா?”

“அது சாத்தியமே இல்லை. உன்னுடைய சாராம்சம் உன்னில் இருந்து பிரிந்துதான் மீண்டும் உன்னை ஓடை ஆக்குகிறது. சொல்லப்போனால், உன்னில் இருக்கும் எந்த முக்கிய அம்சம் உன்னை ஓடை என்று அழைக்கச்செய்கிறது என்பது உனக்குத் தெரியாதபட்சத்தில்தான் நீ அவ்வாறு அழைக்கப்படுகிறாய்” என்றது அசரீரி.

                                                                        இதைக் கேட்டதும் ஓடையின் மனத்தில் சில உண்மைகள் எதிரொலித்தன. தான் அல்லது தன்னுடைய சில பகுதி கள் காற்றால் அரவணைத்து அள்ளியெடுத்துச் செல்லப்பட்ட தருண ங்கள் ஓடையின் நினைவுக்குவந்தன. இப்போது, தன்னுடைய நீராவி யைக் காற்றின் கரங்களில் அள்ளிக்கொடுத்தது ஓடை. அதைக் கனிவாக ஏந்தி மேலே எடுத்துச்சென்று மலையின் முகட்டில் இருந்து அவை மென்மையாகப் பல மைல்களுக்கு அப்பால் விழச் செய்தது காற்று.

ஏகப்பட்ட சந்தேகங்களால் துளைக்கப்பட்டிருந்த ஓடையால் இப்போது தனக்கு நிகழும் அத்தனை அனுபவங்களையும் துல்லியமாக அவதா னித்துத் தன்னுடைய மனத்தில் பதிவுசெய்ய முடிந்தது.

                                                       “இப்போது என்னுடைய உண்மையான சுயத்தை அறிந்துகொண்டுவிட்டேன்” என்றது ஓடை.  அனுபவப் பாடத்தைக் கற்று க்கொண்டிருந்தது ஓடை. மீண்டும் மணல் சொன்னது, “எங்களுக்குத் தெரியும். தினம்தோறும் இப்படி நிகழ்வதைக் கவனித்துக்கொண்டிருக் கிறோம். ஏனென்றால் மணற்பரப்பாகிய நாங்கள் நதிக் கரையில் இருந்து மலைவரை பரந்து விரிந்து கிடக்கிறோம்.” இதனால்தான் ஓடையின் வாழ்க்கை மணலில் எழுதப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. நதியாக மாற ஆசைப்படும் அன்பு பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...