பின் தொடர்பவர்கள்

0401 எனக்கு நானே நீதிபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0401 எனக்கு நானே நீதிபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 பிப்ரவரி, 2017

0401 எனக்கு நானே நீதிபதி

எனக்கு நானே நீதிபதி

அன்பர்களே நம்மில் பலபேர் நினைப்ப துண்டு ,நமக்கு வரும் துன்பங்களுக்கு காரனம் வேறு ஒரு நபர் என்று நினைக்கி ன்றோம் அது தவறு நண்பர்களே! " நன்மையும் தீமையும் பிறர் தர வாரா" என்ற ஒரு சங்க காலத்து பாடல் இருக்கி ன்றது. நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரனமாக இருக்கின்றோம். சொர்க்கமும் நரகமும் நம்வசமே நான் சொல்வதை உன்மனம் கேட்கட்டுமே! வசந்தமாளிகை திரைப்படப்பாடல் இது! நான் சொல்வதை, உங்கள் உள்ளங்கள்  உறுதிப்படுத்த இதோ இன்னுமொரு கதை,,,,,,,
            சென் துறவி ஒருவர், தான் செல்லும் இடம் அனைத்திற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கூடவே எடுத்துச் சென்றார். மடாதிபதியாக இருந்த ஒருவர், துறவியின் இந்தச் செயலைப் பார்த்தார். 
அவர் தனக்குள், "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அக அழகே சாதுக்க ளுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே இருந்தால், எப்பொழுது அஞ்ஞானத்தை வில க்குவது, எப்பொழுது ஞானத்தை அடைவது?" என்று மனதினில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.

துறவியின் செயலில் இருந்தக் குற்றத்தினை சுட்டிக்காட்டித் தெளிவிக்க எண்ணிய மடாதிபதி, துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் அந்தக் கண்ணாடியினை உன்னுடன் எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். 

உடனேத் துறவி தன்னுடைய கைப்பையிலிருந்த கண்ணாடியினை வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனைகள் வரும் போது, இந்தக் கண்ணாடியினைப் பார்ப்பேன், அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறினார். மடாதிபதி அங்கிருந்து மெல்ல நகர்ந்தார்!  என்ன அன்பர்களே நான் சொல்வது சரிதானே! அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...