பின் தொடர்பவர்கள்

0188 எலும்புக்குள் சாதி ஏது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0188 எலும்புக்குள் சாதி ஏது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூன், 2015

0188 எலும்புக்குள் சாதி ஏது?

எலும்புக்குள் சாதி ஏது?

                           ஓடும் உதிரத்தில் உற்று  ப்பார்த்தாலும், சாதிகள் தெரிவது ண்டோ? இது கவிமணி தேசியவிநா யகம் பிள்ளையின் கவிதை அடி! சாதிகளின் பெருமை பேசி வாழ்வ தில், தமிழர்களுக்கு நிகரானவர்கள் யாருமே இல்லை. அதுவும் யாழ்ப்பா ணத்து தமிழர்களை சொல்லத் தேவையில்லை. இந்த சாதிய போரா ட்டத்திற்கு எதிராக போராடி, ஓரளவு வெற்றி கண்டவர் தமிழ்த்தேசிய மாவீரன் பிரபாகரன் என்றால் அது மிகையாகாது.

                                                                         ஆனாலும் அறவே ஒழிக்கப்படவேண்டிய இந்த சாதியக் கொடுமை, மீண்டும் தலைதூக்குவது, நம்மை எல்லாம் தலை குனியவைக்கின்றது. அதுவும் சாதி பேதமற்ற, புலம் பெயர் நாடுகளிலும் தற்போது தலைதூக்குவது போலத்தெரிவது வேதனை அளிக்கின்றது. தமிழ் தேசிய வீரன் தமிழர்களுக்கு இடையே உள்ள சாதிய வேறுபாட்டை களைத் தெரிய முற்பட்டதுபோல உலக மாவீரன் அலெக்சாண்டரும் முயற்ச்சி செய் தார் என்பது வரலாற்று உண்மை!

         
                          மகா அலெக்சாண்டரின் தத்துவ ஆசான் டயோ (இவர் கிரேக்க ஞானி அரிஸ்டோடலின் மாணவ னின் மாணவன்) ஒரு முறை, எலும்பு க்கூடுகள் சிலவற்றை நீண்ட நேரம் உற்றுப்பார் த்துக்கொண்டிருந் தார், அவரின் செயலை அவதானித்த அலெக்சாண்டர் " என்ன நீண்ட நேரம் எதையோ ஆராய்கின்றீர்கள்?" என்று கேட்டான். அதற்கு டயோ அவர்கள் "ஆமாம் இந்த எலும்புகளில் எது ரோமையர்களது?, எது பாரசீகர்களுடை யது?, எது அடிமைகளுடையது? எது மன்னர்களூடையது? என்று தெரியாமல் தீணறுகின்றேன் என்றார். ஞானி டயோ வின் வார்த்தை மகா அலெக்சாண் டரை வெகுவாக பாதித்தது.

                                                            பின்னர் அந்த வார்த்தை, மகா அலெக்சாண்டர் பாரசீகர்களை யும், உரோமையரையும் இணைப்பதில் அரும்பாடுபடுவதற்கு ஊன்றுகோளாக இருந்தது. அதற்காக பாரசீக பெண் ஒருவரை யும் அவர் திரு மணம் செய்தார் இதுவே வரலாற்று உண்மை, இதை கதையாக எடுத்துக் கொள்கின்றீர்களோ அல்லது ஒரு சம்பவமாக எடுத்துக்கொள்கின்றீர்களோ அது உங்களை பொறுத்தது
.அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...