பின் தொடர்பவர்கள்

0119 இசை எனும் தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0119 இசை எனும் தவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0119 இசை எனும் தவம்

இசை எனும் தவம்

ஒரு நவாபின் அரண்மனையில் பல இளம் பாடக ர்கள் இருந்தனர். அரசவைக்கு வந்த சிறந்த பாடகன் ஒருவன் தான் பட சில விதிகளைச் சொன்னான். அவை கடுமையாயிருந்தன. அதாவது அவன் பாடும் போது யாரும் தலையை அசைக்கக் கூடாது. அசைந் தால் அவர்களின் தலைதுண்டிக்கப் பட வேண்டும் .நவாபும் விதிமுறைகளுக்கு ஒத்துக் கொண்டு இசை யைக் கேட்க விரும்புபவர்கள் இந்தக் கட்டுப்பா ட்டை ஏற்றுக் கொண்டால் வரலாம் என அறிவித் தான்.
                                    பல ஆயிரம் பேர் அந்த பாடகனின் இசையைக் கேட்கக் கூடினர்.விதிகளை நிறைவேற் றும் பொருட்டு நவாப் உருவிய வாளுடன் வீரர் களை ஆங்காங்கு நிறுத்தினார்.ஆனால் தலையை அசைப்பவர்களை நிகழ்ச்சியின் இடையில் வெட்டி க்கொண்டு இருந்தால் ,பாடகனுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால்,தலை அசைப்பவர்களை அடை யாளம் காணச் சொன்னான்.
                                                         இவ்வளவு கடுமையான ஏற்பாடுகளுக்குப் பின்னும் பத்து பேர் தலை அசைத் துவிட்டனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தலை யை வெட்ட அரசன் ஏற்பாடு செய்தான்.அப்போது அந்த பாடகன் சொன்னான்,''இந்த பத்து பேர் மட் டுமே என் பாடலைக் கேட்கத் தகுதி உள்ளவர்கள். மற்றவர்கள் மரணத்திற்குப் பயந்து என் பாடலைக் கவனிக்கவில்லை.அவர்கள் கவனம் அவர்களின் உயிர் மீதுதான். அவர்களுக்கு இசை தேவையில் லை. நான் பாடிய பாடல் இந்த பத்து பேருக்கு மட் டும் தான்.அவர்கள் என் பாடலின் இனிமையில் தம்மை மறந்து விட்டார்கள்.எல்லாக் கட்டுப்பாடுக ளையும் மீறி பாடலின் இனிமை அவர்களது இதய ங்களைத் தொட்டிருக்கிறது..மீதி இரவும் நான் அவர்களுக்காக பாடுவேன்.எனக்குப் பரிசு எதுவும் தேவையில்லை.இசையைக் கேட்கும் உண்மை யான மனிதர்களைக் கண்டுபிடித்ததே சரியான பரிசு.  இவர்களுக்கு பரிசு கொடுக்கும்படி நான் உங் களை வேண்டுகிறேன்.ஏனெனில் இசை என்பது ஒரு தவம் என உணர்ந்தவர்கள் இவர்கள்''அந்த பத்துப் பேரைப் பொருத்தமட்டில் இசையைக் கேட்கும் போது அவர்களே மறைந்து போய்விட்டார்கள். .இசைமட்டுமே அங்கு இருந்தது .

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...