பின் தொடர்பவர்கள்

0169 உமிக்கு பதில் அரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0169 உமிக்கு பதில் அரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0169 உமிக்கு பதில் அரிசி

உமிக்கு பதில் அரிசி

ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந் தான். மிகவும் கொடுமைக்கா ரன். மக்களை வரிகளால் வாட்டி வதை த்துக்கொண்டி ருந்தான். மக்களு க்கு வீட்டுக்கு ஒரு மூட்டை நெல் கொடு த்தான். அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி வாங்கி க்கொண்டான். அதனால் மக்களுக்கு அந்த அரசன் மீது கடுமையான கோபம். இவன் எப்படா இறப்பான் என்று மனம் நொந்துபோயிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு க்கு ஏற்ப ஒரு நாள் அந்த அரசன் நோய்வாய்ப்பட் டான்.அப்போது அந்த அரசனுக்கு ஒரு எண்ணம் வந்தது. இத்தனை ஆண்டு காலம் மிகவும் சுயநல மாகவே வாழ்ந்துவிட்டோம். நாட்டில் ஒருவருக்குக் கூட தன் மீது மதி ப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தன்னை நல்ல வன் என்று ஒருவர் கூட சொல்லவில்லையே என்ற வருத்தம் வந்தது. தன் மகனை அழைத்து.“இதே மக்கள் தங்கள் வாயால் என்னை அந்த மகராசன் மிக நல்லவன் என்று சொல்ல வேண்டும்“ என்று தன் கடைசி ஆசையைச் சொல்லிவிட்டு உயிர் துறந்தான். தன் தந்தையின் இறுதிஆசையல்லவா இதை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று முடிவு செய்த இளவரசன் மக்களிடம் கீழ்க்கண்டவாற அறிவிப்பு செய்தான் .“ஒவ்வொரு வீட்டுக்கும் நான் ஒரு மூட்டை உமி தருவேன். அதற்குப்பதிலாக நீங்கள் ஒரு மூட்டை அரிசி தரவேண்டும்“ என்பது தான் அந்தஅறிவிப்பு. மக்களு க்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அதனை வெளிப்படுத்தினால் ஏற்படும் விளை வுகளை எண்ணிப்பார்த்து தம் தலைவிதி என்று எண்ணி க்கொண்டு இந்த இளவரசனுக்கு அந்த மகராசனே பரவாயில்லை. அவன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் ‘அந்த மகராசன் மிக நல்ல வன்’ அவன் நெல்லை கொடுத்துவிட்டாவது அரிசி கேட்டான். இவன் உமியைக் கொடுத்துவிட்ட ல்லவா அரிசிகேட்கிறான் என்று சொன்னார் கள்..இறந்துபோன அரசனின்ஆன்மா நிறைவ டைந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டான் இளவரசன்.
 அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...