பின் தொடர்பவர்கள்

0303 கொடை வள்ளல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0303 கொடை வள்ளல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜூன், 2019

0303 கொடை வள்ளல்

கொடை கொடுப்பதில் வள்ளல்  !  பேசாலைதாஸ்
                                     
                                 என்ன கொடுப்பார்? ஏது கொடுப்பார் என்றெல்லாம் ஏங் குபவருக்கு பொன்னும் கொடுப் பார் பொருளும் கொடுப்பார், போதாது போதாது, என்றால் தன் னையே கொடுப்பார், தன் உயி ரையே கொடுப்பான் வீரன் கர்ணன் மாமன்னன்!சின்ன வய தில் இரு ந்தே நான் மகாபாரதம் வாசித்து வருகின்றேன், சிவாசி நடித்த கர்ணன் படத்தை பலமுறை பார்த்துவரு கின்றேன். என்னை கவர்ந்த பாத்திரம் கர்ணன்! நட்பு க்கு இலக்கணம் அவன்! கொடை கொடுப்பதில் வள்ளல் அவன்! தன் நண்பன் துரியோதனனுக்காக தனது சொந்த உடன் பிறப்பு களையே கொல்லத்துணிந்தவன் அவன், நண்பன் கர்ணனைப்போல தானும் ஒரு கொடை வள்ளலாக மாறவேண்டும் என துரியோதனன் விரும்பினான். கேட்டவர்களுக்கு இல்லை என கொடுக்கப் படும் என்ற தர்மக்கொடியான அன்னக்கொடியை அவன் தன் நாட்டிலே பறக்கவிட்டான்,

                                                                      திடிரென்று அவன் நாட்டில், அடைமழை கொட்டத்தொடங்கி, நாடெங்கும் வெள்ளம்! அந்த நாட்டில், தன் மகளுக்கு கல்யாண விருந்தை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார் ஆஸ்தான கவி ஞர் ஒருவர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கல்யாண விருந்து சமைக்க, உலர்ந்த விற்கு இல்லையே என்ற கவலை கவிஞருக்கு, துரியோதனனி டம் ஓடினார், தனது கஸ்டத்தை அவனிடம் சொன்னார், உலர்ந்த விறகு சேகரிக்கும் படி தன் படை வீரருக்கு துரியோதனனும் கட்டளை இட்டான். நாடெங்கும் தேடி, அந்த மழைக்காலத்தில் உலர்ந்த விரகு எங்கும் கிடை க்கவில்லை, துரியோதனும் தனது கஸ்டத்தை கவிஞருக்கு சொல்லி கைவிரித்தான் துரியோதனன்.

                                                           மனமுடைந்த கவிஞர் கர்ணனிடம் சென்றார். தனது கஸ்டத்தையும், துரியோதனனிடம் தான் சென்றதையும் விபரி த்தார் கவிஞர், உடனே கர்ணன் தன் படைவீரர்களை அழைத்து, அந்தப் புரத்தில் உள்ள மாளிகையை உடைத்து, அதில் உள்ள மரம், தளபாட ங்களை விறகாக கொடுத்தான் கர்ண மாமன்னன், கர்ணனின் இந்த செயலைக்கண்ட அவன் நண்பன் துரியோதனன், என் நண்பன் கொடு ப்பதற்கு என்றே பிறந்தவன், அவனுக்குத்தான் தெரியும் எதை எப்படி எப்பொழுது கொடுப்பது என்று சொல்லி புலகாங்கிதம் அடைந்தான்,, அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றான் என்று சொல்லி கதையை முடிக்கின்றேன் அன்புடன் பேசாலைதாஸ்


துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...