பின் தொடர்பவர்கள்

0471 அடி முட்டாளின் அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0471 அடி முட்டாளின் அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

0471 அடி முட்டாளின் அறிவு,,,,,,

அடி முட்டாளின் அறிவு,,,,,,

அன்பர்களே சிலவேளை களில் நமது காரியம் கை கூடவேண்டுமானல், அத ற்காக அடிமுட்டாளாக நம்மை காட்டிக்கொள்ள நேரிட்டா லும், அதற்கும் நாங்கள் தய ங்கவேண்டிய அவசியமே இல்லை. எப்படியோ நமக்கு ஆகவேண்டியது ஆகிவி ட்டால் போதும்! இதனை தந்திரம் என்பதா அல்லது சயோசித புத்தி என்பதா? எனக்கே புரியவில்லை எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்மே நம க்கு நண்மை கிடைக்கின்றது என்றால் அதற்க்காக் நம்மை முட்டாள் என்று காட்டிக்கொள்வதில் என்ன தவறு? அறிவாளி என்ற‌ ஆணவத்தால் அழிவை தேடுவதை  விட, அடி முட்டாள் என்று பெயர் எடுத்து ஆக்கப்பணிகள் செய்வதே வெற்றி! இதனை அழகாக சித்தரிக்கும் என் சிந்தனைக்கு வந்த ஒரு கதை, கதையை இப்படி கற்பனை பண்ணி தொடக்குகி ன்றேன்.                   ஒரு கிராமத்தில் ஒர் அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொரு ளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.ஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்து க் கிண்டலாக, "அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார். அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான். “பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.


                                            "தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை ‘அறிஞரின் மகனே’ என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்திருந்தால், அன்றோடு இந்த விளையாட்டு நின்றிரு க்கும், எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போயிருக்கும். எனவே தான் அவ்வாறு செய்தேன்” என்று விளக்கம் சொன்ன மகனைப் பார்த்து, அறிஞர் திகைத்தார்! ஆம் அன்பர்களே! வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிய வேண்டியிருக்கிறது.  ன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...