பின் தொடர்பவர்கள்

0097 கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0097 கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0097 கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்..

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்..

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட் டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன் ? என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.
                                                நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத் துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன் ? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரு ம்பு தாரளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.
                                                 பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமா ன்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...